No menu items!

தமன்னா காதல் கன்ஃபர்ம்!

தமன்னா காதல் கன்ஃபர்ம்!

கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்துதான் ஆகணும்’ – 90-களின் இளசுகளிடம் அதிகம் புழக்கமான ஒரு பழமொழி. காலம் மாறினாலும் அதில் இருக்கும் சமாச்சாரம் ஒன்றுதான். என்ன பண்ணினாலும் அது ஒரு நாள் வெளிவந்துவிடும் என்பதே.

இப்போது தமன்னா விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவும், விஜய் வர்மாவும் இதழ் முத்தம் கொடுத்தார்கள் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது.

அதற்கேற்றால் போல் தமன்னாவும், விஜய் வர்மாவும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிவது, பார்ட்டிக்கு செல்வது, விமான நிலையத்தில் தென்படுவது என அந்த கிசுகிசுக்கு தேவையான அம்சங்களையெல்லாமல் தவறாமல் கொடுத்து கொண்டே இருந்தனர்.

இப்போது ஒருவழியாக தமன்னா வாயிலிருந்தே அந்த சமாச்சாரம் பற்றி வெளிவந்திருக்கிறது. ‘லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ வெப் சிரீஸில் தமன்னாவும், விஜய் வர்மாவும் நடித்திருக்கிறார்கள். அந்த வெப் சிரீஸை பற்றி பேசும் போதுதான் காதல் விஷயத்தில் சரண்டர் ஆகியிருக்கிறார் தமன்னா.

‘ஒரு ப்ராஜெக்ட்டில் சேர்ந்து நடிச்சாலே போதும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு கவர்ச்சி உருவாகிவிடும் நினைக்கிறாங்க. அப்படியில்ல. ரெண்டு பேருக்கு இடையில உணர்வுப்பூர்வமான ஒரு பந்தம் உருவாகணும். அது அவங்க தொழில் சார்ந்து இருக்க கூடாது. அப்பதான் அந்த உறவு அடுத்தக்கட்டத்துக்கு போகும்.’ என்று தத்துவ மழையைப் பொழிந்திருக்கிறார் தமன்னா.

அந்த வகையில விஜய் வர்மா கூட எனக்கு இயற்கையாகவே ஒரு அற்புதமான உறவு உருவாகி இருக்கு. இந்தியாவுல ஒரு பெண் தன்னோட துணையை தேர்ந்தெடுக்கணும்னா அவள் தன்னோட வாழ்க்கையை அவருக்கு ஏற்ற மாதிரி மாத்தி அமைச்சுக்கணுங்கிற மனநிலைதான் சமூகத்துக்கு இருக்கு. என்னைப் பொறுத்தவரை எனக்குன்னு ஒரு உலகத்தை உருவாக்கி இருக்கேன். விஜய் வர்மா அதை புரிஞ்சுக்கிட்டார். அப்படியே ஏத்துகிட்டார். என்னை எதற்காகவும் மாத்திக்க அவர் சொல்லல.

எங்களுக்கு இடையே இருக்கிற நட்பு, எங்களுக்குள்ளே இருக்கிற உறவோட ஒரு அங்கம்.’ என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

தமன்னா விஜய் வர்மாவுடன் இருப்பது காதல் என்று வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர, இனியும் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியோடு யாரும் எங்களை பின் தொடராதீர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...