No menu items!

100 கோடி வீடு. ப்ரைவேட் ஜெட் –நயன்தாராவின் சொத்து மதிப்பு ஆச்சரியங்கள்

100 கோடி வீடு. ப்ரைவேட் ஜெட் –நயன்தாராவின் சொத்து மதிப்பு ஆச்சரியங்கள்

’லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் நயன்தாரா சொத்து மதிப்பு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது அதிகாரப்பூர்வமான தகவலா இல்லை யூகமா என்று முழுவதுமாக உறுதிப்படுத்தபடவில்லை.

ஆனாலும் நயன்தாராவுக்கு இருக்கும் சொத்து பட்டியல் ஆச்சர்யமூட்டுகிறது.

நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.

தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வசிக்கும் இல்லத்தின் மதிப்பு சுமார் 100 கோடியாம். 4 படுக்கையறை, ஹால், கிச்சன் என இருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்டில் சொகுசாக அமர்ந்தபடியே திரைப்படம் பார்க்கும் சினிமா ஹால், நீச்சல் குளம், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் நவீன உடற்பயிற்சி கூடம் என பல வசதிகள் இருக்கின்றன.

இந்த அப்பார்ட்மெண்ட் தவிர ஹைதராபாத்தின் பணக்காரர்கள் நிறைந்த பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்கிறதாம். இதன் மதிப்பு சுமார் 30 கோடி எனத் தெரிகிறது.

இந்த அப்பார்ட்மெண்ட்கள் தவிர பல ஆடம்பர சொகுசு கார்களும் நயன்தாரா வசம் இருக்கின்றன. சுமார் 1.76 கோடி மதிப்பு பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் கார், ஒரு கோடி மதிப்பிலான மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்350டி, அடுத்து பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் கார் ஒன்றும் உள்ளனவாம்.

இவைத்தவிர சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்தாராவுக்கும் இடம் இருக்கிறது. பாலிவுட்டில் சொந்தமாம ப்ரைவேட் ஜெட் வைத்திருக்கும் ஷில்பா ஷெட்டி, ப்ரியங்கா சோப்ரா, மாதுரி தீக்‌ஷித் போன்ற நடிகைகளுடன் நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என பேச்சு அடிப்படுகிறது. இந்த ப்ரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.

இந்த சொத்துகள் தவிர, பல்வேறு பிஸினெஸ்களிலும் நயன்தாரா முதலீடு செய்திருக்கிறாராம். இதில் அவருடைய லிப் பாம் நிறுவனமும் அடங்கும். மேலும் அரபு அமீரகத்தில் இருக்கும் ஆயில் நிறுவனத்திலும் நயன்தாரா முதலீடு செய்திருக்கிறாராம்.

சினிமாவை பொறுத்தவரை தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நயன்தாரா நடத்தி வருகிறார்.

இந்த சொத்துக்களின் மூலம் பணக்கார நடிகைகள் பட்டியலில் முதல் தென்னிந்திய நடிகையாக நயன்தாரா இணைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...