No menu items!

வாவ் எதிர்காலம் – விஜய் ராசி எப்படியிருக்கு?

வாவ் எதிர்காலம் – விஜய் ராசி எப்படியிருக்கு?

ஜோதிடர் முனைவர். ந. ஞானரதம் M.A., M.PHIL., PH.D.,

வார ராசி பலன் (ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை)

மேஷம் – பண வரவுக்கு பஞ்சமில்லை

கணவன் – மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியைத் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை. கலைஞர்களுக்கு அரசியலில் இருந்து அழைப்பு வரும். கல்வித் தடை நீங்கும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தேதிகள் 11, 14

ரிஷபம் – முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்

விருந்தினர்கள், உறவினர்களின் வருகை அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உடல் ஆரோக்கியம் தேறும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும்.
பணப் புழக்கம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட தரும் நிறங்கள்: வெள்ளை, பச்சை
அதிர்ஷ்ட தேதிகள்: 15, 17

மிதுனம் – உறவினர்களால் ஆதாயம்

உற்சாகம் அதிகரிக்கும் வாரம் இது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியப் போக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட தேதிகள்: 11, 15

கடகம் – சமூகத்தில் அந்தஸ்து உயரும்

வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். உடல் உஷ்ணம் அதிகமாகும். பிள்ளைகளின் புத்திசாலித்தனத்தை ஆசிரியர்கள் மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட தேதிகள் 14, 16

சிம்மம் – விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள்

அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள். பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் வெளியூருக்கு மாற்றலாவார்கள். வியாபாரம் சாதகமாக இருக்கும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். பெற்றோர் உங்கள் எண்ணங்களை புரிந்து செயல்படுவர். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்ச்
அதிர்ஷ்ட தேதிகள்: 12, 15

கன்னி – ஆரோக்கியம் பளிச்சிடும்

புதிய முயற்சிகள் வெற்றி தரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். ஆரோக்கியம் பளிச்சிடும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், கிரே
அதிர்ஷ்ட தேதிகள் 14, 16

துலாம் – நட்பு வட்டம் விரிவடையும்

தோல்வி பயம் நீங்கும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உணவில் அக்கறை காட்டுவது நல்லது. கழுத்து வலி வந்து நீங்கும்.
விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட தேதிகள் 12, 14

விருச்சிகம் – இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்

பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நற்செய்தி வரும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட தேதிகள் 15, 17

தனுசு – பணப்பிரச்சினை இருக்காது

சோர்வும் களைப்பும் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. இனிமையான சம்பவம் உண்டாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுப் போன படிப்பை தொடர்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். மகனுக்கு விசா கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட தேதிகள் 14, 16

மகரம் – வசதி வாய்ப்புகள் பெருகும்

புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும் பாராட்டையும் பெறுவார்கள். பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக பேசாத உறவினர்களிடம் மீண்டும் பேசுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் தேறும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சாம்பல், பச்சை
அதிர்ஷ்ட தேதிகள் 11, 17\

கும்பம் – சுபச் செலவுகள் அதிகமாகும்

சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்க வழி கிடைக்கும். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட தேதிகள் 12, 14

மீனம் – காதல் கண் சிட்டும்

பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து வந்து சேரும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவர். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட தேதிகள் 11, 17

இந்த வார ஸ்டார் – விஜய்

கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...