No menu items!

நியூஸ் அப்டேட்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் – சசிகலா

நியூஸ் அப்டேட்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் – சசிகலா

அதிமுக கட்சியை விட்டு சசிகலாவை நீக்கிய அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஏற்றுக்கொண்டு  இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த தீர்ப்பை கொண்டாடும் விதமாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாமக்கல்லில் பேட்டியளித்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என கூறினார்.

இலங்கை: டீசல் வாங்க 2 நாட்களாக வரிசையில் நின்றவர் உயிரிழப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையின் தங்கொட்டுவ நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுமார் இரண்டு நாட்களாக டீசலுக்காக காத்திருந்த ஒருவர், கீழே விழுந்து தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வயது 47, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஓட்டுநர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோல் வென்னப்புவவில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 51 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அமைச்சரானார் நடிகை ரோஜா!

ஆந்திராவில் 2019 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோதே இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். அதன்படி, கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் ஏற்கனவே பதவியிலிருந்த 11 பேருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 14 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா ஒருவர். இதனை அவரது தொண்டர்கள் நகரியில்  உள்ள ரோஜாவின் வீட்டின் அருகிலும் கட்சி அலுவலகத்தின் முன்னும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

சென்னையில் ரூ. 1.8 கோடி பிட் காயின் மோசடி

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி நபேரா. இவரிடம் புனேவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பிட்காயினில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி ரவிநபேரா ரூ.1 கோடியே 80 லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், பிரகாஷ்  கூறியபடி கூடுதலாக பணம் கிடைக்கவில்லை; மேலும், அசல் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி ரவிநபேரா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீஸார் புனேயில் இருந்து சென்னை வந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் சுரேசை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் தயாராகும் ஆப்பிளின் புதிய ஐஃபோன் 13

சென்னையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய 3 ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிளின் ஐஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஐஃபோன் 13ஐ உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஐஃபோனின் முன்னணி மாடல் ஸ்மார்ட் ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...