விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.
வயநாடு பகுதியில் உள்ள மண்ணுக்கு அடியில் ‘சாயில் பைப்பிங்’ என்ற பிரச்சினை இருப்பதும் அங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி திரும்பும் வரை இஸ்ரேல் போலீஸாருக்கு சீருடைகளை தைத்து அனுப்புவதில்லை என்று மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிடட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விஜயின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ நேரடியாக மோதியது போல், ‘விஜய்68’ மற்றும் ‘விடாமுயற்சி’ இரண்டும் நேரடியாக மோதும் வகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.