No menu items!

நிர்வாண காட்சிகளை நீக்கியதால் ஆண்ட்ரியா வருத்தம்!.

நிர்வாண காட்சிகளை நீக்கியதால் ஆண்ட்ரியா வருத்தம்!.

’இரவின் நிழல்’ படத்திற்கு பிறகு நிர்வாணமாக நடித்த காட்சிகளைப் பற்றிய சர்ச்சைகள் கிளம்பின.

இந்த சர்ச்சைகளுக்கு தூபம் போடும் வகையில், திடீரென பாலிவுட்டின் ரன்வீர் சிங் பிறந்த மேனியில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை நெட்டில் தட்டிவிட்டார். நியூட் என்ற வார்த்தை மேலும் வைரல் ஆனது.

ரன்வீருக்கு அடுத்து நம்மூர் விஷ்ணு விஷாலும் ஆடைகளுக்கு விடைக் கொடுத்து, நிர்வாண தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்,
இதற்கும் லைக்ஸ், டிஸ்லைக்ஸ் பஞ்சாயத்து நடந்தது.

இந்நிலையில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்த 15 நிமிட காட்சிகளை தனது படத்திலிருந்து தூக்கி எறிந்து விட்டதாக மிஷ்கின் கூறி, தமிழ் சினிமாவை அதிர வைத்திருக்கிறார்.

15 நிமிட நிர்வாண காட்சிகள் என்றால், அதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும். கஷ்டப்பட்டு நடித்து, அதை எடுத்து முடித்த பிறகு கத்திரிப் போட்டு தூக்கி எறிந்தால் அதில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு எப்படி இருக்கும்?

ஆண்ட்ரியாவுக்கு அதில் ரொம்ப வருத்தமாம். ’கஷ்டப்பட்டு நடித்தேன். நியூட் ஆக நடித்ததால் இப்படம் மூலம் ஒரு ப்ரேக் கிடைக்க வாய்ப்பிருந்தது. ஒடிடியில் வெளியிடசென்சார் செய்ய தேவையில்லை. தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் பேசப்படும் படமாக மாறினால், இந்தி மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற திட்டம் போட்டேன். அது இப்போது புஸ் என்று ஆகிவிட்டது’ என்று ஆண்ட்ரியா தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு புலம்பி விட்டாராம்.

ஆஸ்கர் விருதுகளில் ஒடிடி-யின் தாக்கம்!

ஒடிடி-யின் வருகை பொழுதுபோக்கு துறையில் பல மாயாஜாலங்களை செய்து வருகிறது. ஒரு பக்கம் திரையரங்குகளுக்கு போகாமலேயே வீட்டில் இருந்தபடியே ஒட்டுமொத்த குடும்பமும் நினைத்த நேரத்தில் படம் பார்க்கும் செளகரியத்தைக் கொடுத்திருக்கிறது.

இது பாரம்பரியமான திரையரங்குகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருப்பதால் தற்போது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இந்நிலையில் ஒடிடி-யின் தாக்கம் ஆஸ்கர் விருது வரை விரிவடைந்திருக்கிறது என்கிறார்கள்.

வருகிற 12 மார்ச் 2023-ல் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. அதனால் ஆஸ்கர் ஜூரம் இந்திய சினிமாவில் இப்பொழுதே தீவிரமாகி வருகிறது.

இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படம் குறித்த விவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இந்தப்படம் பெஸ்ட் இண்டர்நேஷன்ல் ஃப்லிம் பிரிவில் கலந்து கொள்ளும்.

இந்த வருடம் பான் – இந்தியா கான்செப்ட் விஸ்வரூபம் எடுத்திருக்கும் சூழலில், எந்தப் படத்தை அரசு பரிந்துரைக்கும் என்பதில் இப்பொழுதே விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒடிடி-யில் வெளியிட்டால் இந்தியாவைத் தவிர்த்து இதர நாடுகளிலும் இப்படங்களை பார்க்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி முன்னணியில் இருப்பதால், அமெரிக்காவிலும், ஹாலிவுட் வட்டாரத்திலும் இங்கே பரபரப்பாக பேசப்பட்ட படங்களை ஆஸ்கர் விருது குழுவினர் பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அவர்களிடையே லாபி செய்வது சுலபமாகி இருக்கிறது என்கிறார்கள்.

இந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் ’RRR’ படத்திற்கு ஏற்கனவே நல்ல மவுசு உருவாகி இருக்கிறது. இதை தற்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பின்னணி வேலைகள் நடந்து வருகிறதாம். அதாவது நெட்ஃப்ளிக்ஸில் வெளியானதை வைத்து, மார்க்கெட்டிங் மற்றும் ப்ரமோஷன் வேலைகளுக்கு பெரும் தொகையை களத்தில் இறக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம். மறுபக்கம் கேஜிஎஃப்-2 மற்றும் அக்‌ஷயு குமார் நடித்த ‘ப்ரித்விராஜ்’ படங்களுக்கும் லாபி வேலைகள் நடப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

இதற்கு நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலும் ஆதரவு இருக்கலாம் என்றும் ஒரு கிசுகிசு நிலவுகிறது.

லோகேஷ் கனகராஜூவுக்கு விருந்து வைத்த மகேஷ் பாபு!

நான்கே படத்தில் நான்கு திசையிலும் ’லோகி லோகி’ என்று எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

‘விக்ரம்’ ஹிட்டானதும் கமல் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரான லெக்ஸஸ் கார் ஒன்றை திடீர் பரிசாக லோகிக்கு வாங்கிக் கொடுத்தார். இந்த பரிசை விட, லோகிக்கு ஜாக்பாட் அடித்திருப்பது பெரும் தலைகளின் பட வாய்ப்புகளில்தானாம்.

‘விக்ரம்’ படத்தின் ப்ரமோஷனுக்காக ஹைதராபாத்திற்கு சென்ற லோகிக்கு அங்குள்ள சூப்பர் ஸ்டார்கள் அமோக வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆளாளுக்கு லோகியை தங்களது இல்லங்களுக்கு வரவழைத்து விருந்து கொடுத்து, அடுத்தப் படத்திற்காக புக் செய்ய துண்டு போட்டு வைத்து வருகிறார்கள்.
சிரஞ்சீவி, ராம் சரணுக்கு அடுத்து இப்போது இந்த வரிசையில் மகேஷ் பாபுவும் இணைந்திருக்கிறாராம்.

சமீபத்தில் வெளியே யாருக்கும் சொல்லாமல் லோகியை சைலண்ட்டாக அழைத்து விருந்து கொடுத்திருக்கிறாராம் மகேஷ் பாபு.

இந்த ரகசிய சந்திப்பின் போது, ‘என்னோட கவனம் தமிழ்ப்படங்களில்தான் இருக்கும். அடுத்து விஜய் உடன் ஒரு படம். அதற்கு அடுத்தது கைதி- 2, அப்புறம் விக்ரம் -2. இந்த வரிசை முடிந்தப் பிறகே மற்ற படங்களை பத்தி யோசிக்க வேண்டும். அதனால் அடுத்த 3 வருடங்களுக்கு வேறெந்த படம் பற்றியும் யோசிக்க வாய்ப்பில்லை’ என்று மகேஷ் பாபுவிடம் சொன்னதாக லோகியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...