No menu items!

30+ திருமணமாகாத தமிழ் ஹீரோயின்கள்

30+ திருமணமாகாத தமிழ் ஹீரோயின்கள்

‘த்ரிஷா, தமன்னா, ஆண்ட்ரியா, மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா, வாழ்க்கையில வேற எதுவும் வேண்டாம். அடுத்த விநாடியே கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாயிடுவேன்’

இப்படி வெறித்தனமாக சினிமா நடிகைகளை தங்களது நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கும் இளைஞர்கள் ஏராளம். இந்த இளைஞர்கள் பட்டியலில் ஜாலியாக ஊரைச்சுற்றிக் கொண்டு ரவுசு காட்டும் வெட்டி ஆபிஸர்கள் முதல் கோடிகளில் சம்பாதிக்க உலகம் சுற்றிய படி மாஸ் காட்டும் கார்பொரேட் சி.இ.ஒ.-க்களும், சி.ஒ.ஒ.-க்களும் கூட அடக்கம்.

இப்படி சினிமா நடிகைகளை தங்களது ஆதர்ச காதலியாக கொண்டாடும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தும், ஏன் சில நடிகைகள் திருமண வயதைக் கடந்த பின்பும் கூட கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம்.

இப்படி 30+ வயதுள்ள சென்யூரிட்டாகளாக நடிகைகள் வலம் வர ஒரே காரணம்,. அவர்களுக்கு பெயர், புகழ், பணம், மரியாதை, சமூக அந்தஸ்து என எல்லாவற்றையும் கொடுத்த அதே சினிமாதான்.

சினிமா என்பது ஒரு கலர்ஃபுல்லான போதை. ஒரே படத்தில். உங்களை ‘மோஸ்ட் வாண்ட்டட்’ ஆக மாற்றும். துணிக்கடை திறப்புவிழா முதல் சமூகத்தொண்டு செய்தவர்களூக்கான விருது வழங்கும் விழாக்களிலும் கூட உங்களை சிறப்பு விருந்தினராக்கி கெளரவிக்கும். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அரசு இயந்திரத்திலும் கூட செல்வாக்கை உருவாக்கும். கார்பொரேஷன் முதல் கார்பொரேட் வரை சாதனைப் பெண்கள் என பாராட்ட வைக்கும். மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே எனக்கு ‘அவங்களை’ ரொம்ப பிடிக்கும் என கணவர்களை வழிய செய்யும். இப்படி இந்த பட்டியல் இன்னும் பெரியதாய் நீளும்.

இதனால், பெரும்பாலான நடிகைகள், இந்த மாதிரியான லைம் லைட்டிலிருந்து விலகி இருக்க விரும்புவது இல்லை என்பது ஒரு பக்கம்.

இந்த கமர்ஷியல் அம்சங்கள் ஒரு பக்கமிருந்தாலும், மனதைக் கணக்க செய்யௌம் எமோஷனல் சமாச்சாரங்களும் இருக்கின்றன.

ஒரு நடிகை என்றால், அவரது அழகையும், கவர்ச்சியையும் வைத்து அவரது குடும்பம் பிழைத்து கொண்டிருக்கும். கூட பிறந்தவர்கள் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைவரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இவர்களது ஆடம்பர ஆசைகளுக்கும், அசத்தலான லைஃப் ஸ்டைலுக்கும் ஆகிற செலவுகளுக்கான ஒரே வருமானம், இரவுப்பகலாக முழித்து, உடல் எடை எகிறிவிடுமோ என ஆசைப்பட்டதைக் கூட சாப்பிடமுடியாமல், டயட் இருந்து, காதல் வந்தாலும் கூட அதை மனதாரக் கொண்டாடமுடியாமல், தனது ஆசையை மறைத்து வாழும் அந்த நடிகையும் அவரது அழகும்தான்.

இப்படி ஏதாவது ஒரு காரணத்தினால் இவர்களும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம்.
இனி 30 வயதை கடந்துவிட்டாலும் இப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கும் தமிழ் நடிகைகள் யார்யாரென்று பார்க்கலாம்.

1.அனுஷ்கா ஷெட்டி

நடிப்பில் பின்னியெடுக்கிற, இந்த உயரமான வாட்டசாட்டமான அனுஷ்காவுக்கு இப்பொழுது வயது 42.
நயன்தாராவுக்கு முன்பாகவே கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்த சூப்பர்ஸ்டார்.
யோகா எக்ஸ்பர்ட்டாக இருந்தாலும் இவரால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்பது இப்போது அவருடைய மார்க்கெட்டுக்கு பிரச்சினையாகி இருக்கிறது. இவரை மெல்லிசாக காட்ட ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் பல லட்சங்களை செலவிட வேண்டியிருக்கிறதாம்.

’பாகுபலி’ புகழ் பிரபாஸூடன் காதல் என்ற கிசுகிசுவில் இவர் அவ்வப்போது .அடிப்படுவது கூட இவரது திருமண விஷயத்தில் பிரச்சினையாக இருக்கக்கூடும்.

2.தமன்னா

‘மில்க்கி ப்யூட்டி’ என்று கொண்டாடப்படும் ரசிகர்களால் தமன்னாவுக்கு 33 வயதாகிறது.

‘சந்த் சா ரோஷன் செஹ்ரா’ என்னும் ஹிந்திப் படத்தில் அறிமுகமானாலும் இவரை அரவணைத்து கொண்டது தமிழ் சினிமாதான்.

இப்பொழுது பாலிவுட்டிலும், வெப் சிரீஸ்களில் கவனம் செலுத்தும் தமன்னாவுக்கு காதல் வைரஸ் தாக்கியிருக்கிறது என்ற கிசுகிசு அடிப்படுகிறது.

’லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்னும் வெப் சிரீஸில் இவருடன் நடிக்கும் விஜய் வர்மாவுடன் கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததாக ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது.

விஜய் வர்மாவுடன் கைக்கோர்ப்பரா இல்லை இன்னும் சில காலம் இப்படி சிங்கிளாக இருப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

3.ஷ்ருதி ஹாஸன்

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திரங்களில் ஒருவரான கமல் ஹாஸனின் வாரிசான ஷ்ருதி ஹாஸன் 37 வயதைத் தொட்டிருக்கிறார்.

கிறங்கடிக்கும் ஹஸ்கி வாய்ஸில் பாடுவது இவரது அடையாளம். குச்சிப்புடி நடனம் அத்துபடி.
வயது வித்தியாசம் பார்க்காமல் தனது அப்பா வயதுள்ள சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவும் இவர் தயங்குவது இல்லை.

இவர் சிங்கிளாக இருந்தாலும் தந்தை வழியில் கல்யாணம் கமிட்மெண்டில் சிக்காமல் ’லிவ்விங் டு கெதர்’ பாணியில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார்கள்.

இவரது நெருங்கிய நண்பர் சாந்தனு ஹாஸரிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்கிறார்கள்.

4.நித்யா மேனன்

கேரள வரவு, ஆனால் தமிழில் இவரது நடிப்பிற்கு தனி வரவேற்பு இருக்கிறது. ‘நடிப்பு ராட்சஸி’ என கொண்டாடப்படும் நித்யா மேனன். ஏப்ரல் 8-ம் தேதி 1988-ல் பிறந்த இவருக்கு 35 வயது.
நடிப்பில் அசத்துவதால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன.

ஏறக்குறைய 50 படங்களில் நடித்திருக்கும் இவர் வீட்டு ஷோ கேஸில் பல விருதுகள் கம்பீரமாக அலங்கரித்து கொண்டிருக்கின்றன. இந்த விருதுகளில் 3 ஃப்லிம்பேர் விருதுகள், 2 நந்தி விருதுகளும் அடங்கும்.
இவரது நெருங்கிய நண்பரான சுதீப்புடன் ப்ரேக் அப் ஆனதிலிருந்து இவர் சிங்கிளாக இருந்து வருகிறார் என்று ஒரு பேச்சும் அடிப்படுகிறது.

5.சாய் பல்லவி

ஹீரோயின் சப்ஜெக்ட்டா, வித்தியாசமான கேரக்டர்களா கூப்பிடுங்கள் சாய் பல்லவியை என்று சொல்லுமளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் சாய் பல்லவி இப்பொழுதுதான் 31 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

‘ப்ரேமம்’ படம் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானாலும் இவரது ஜாகை முழுவதும் ஹைதராபாத்தில்தான். காரணம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு மவுசு அதிகம். இதனால்தான் இவரை ‘லேடி பவர் ஸ்டார்’ என்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் இவர் ஒரு டாக்டர்.

கோயம்புத்தூரில் ஹாஸ்பிடல் ஆரம்பித்து மக்களுக்கு சிகிச்சையளிக்க இவர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் காதல் கிசுகிசுவில் சிக்காத இவர், டான்ஸில் எல்லோரையும் அசத்து ‘ரவுடி பேபி’.

6.ரகுல் ப்ரீத் சிங்

கார்த்தியுடன் ’தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், 33 வயது அழகி.

மாடலாக ரசிக்க வைத்தவர் 2009-ல் வெளியான ‘கில்லி; கன்னடப் படம் மூலம் கதாநாயகியானார். தேசிய அளவிலான கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை இவர்.

சிங்கிளாக இருந்தாலும், ஜாக்கி பாக்னானி என்னும் பாலிவுட் ஆசாமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக வெளிப்படையாக சொல்லியிருக்கும் தைரியசாலி.

வயதும், அழகும் இருக்கும் போதுதான் சினிமாவில் மதிப்பு. அதைப் புரிந்து கொண்டிருப்பதால் ரிலேஷன்ஷிப் மட்டும்தான் இப்போதைக்கு. திருமணம் பற்றி இன்னும் இரண்டு வருடம் கழித்து யோசிக்கலாம் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

7.தாப்ஸி பன்னு

’ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தாப்ஸி. வெள்ளாவியில் வைத்து வெளுத்தெடுத்தது போல அப்படியொரு வெள்ளை பளிங்கு சிலை இவர்.

நடிப்பிலும் சரி மனதில் பட்டதை பேசுவதிலும் சரி தாப்ஸி எப்பவும் டாப்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நல்லப் படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தும் தாப்ஸிக்கு 35 வயது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாத சிங்கிள் இந்த தாப்ஸி.

8.ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான, வெளிப்படையான, அழகான ஒரு சில நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆண்ட்ரியா, காதல் கிசுகிசுவில், ரிலேஷன்ஷிப் சர்ச்சைகளில் சிக்கினாலும் இன்றும் இவர் சிங்கிள்தான்.

அரக்கோணத்தில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ இவருக்கு வெஸ்டர்ன் மியூசிக்கில் ரொம்பவே ஆர்வம். இவருக்கு 37 வயதானாலும் இவரது குரலுக்கு இன்னும் டீஜ் ஏஜ்தான். அவ்வளவு இளமை

9.ப்ரியா பவானி சங்கர்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கண்ட வெகு ஒரு சில நட்சத்திரங்களில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அப்படியே காதல் முதல் கல்யாணம் வரை’ என்ற சீரியலில் நடிகையானார், அடுத்து சினிமாவுக்கு தாவினார். இப்படியொரு பேக் கிரவுண்ட்டில் படிப்படியாக முன்னேறி வந்ததாலோ என்னவோ இதுவரையில் கவர்ச்சிப் பக்கம் இவர் திரும்பி பார்க்கவே இல்லை.

எம்.பி.ஏ படித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர், ரிலேஷன்ஷிப்பில் இருந்து கொண்டு, தனது காதலருக்காக கனவு இல்லத்தைக் கட்டியிருந்தாலும், இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாதா சிங்கிள்தான்.

10.த்ரிஷா

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக கதாநாயகியாகவே தொடர்ந்து நடித்துவரும் அசல் தமிழ் நடிகை த்ரிஷா. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் தெரிந்த ஒரு நடிகையாக இருப்பது இவரது செல்வாக்கை காட்டுகிறது.

திருமணம் நிச்சயமாகி அது எதிர்பாராத பிரச்சினைகளால் நின்று போன சமயத்தில் இவருக்கு கைக்கொடுத்தது தமிழ் சினிமா.

’பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘குந்தவை’யாக இவரைப் பார்த்ததும் மீண்டும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக க்ரஷ். இதனால் 40 வயதானாலும் த்ரிஷா என்றால் எல்லோருக்கும் சிலிர்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...