No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

இராவண கோட்டம் (தமிழ்) – ஆஹா

ராமநாதபுரம் மாவட்ட்த்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெருவில் இரண்டு சமுதாய மக்கள் வசிக்கின்றனர். மேலத்தெருவுக்கு பிரபுவும், கிழத்தெருவுக்கு இளவரசுவும் தலைவர்களாக இருந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சாந்தனுவும், சஞ்சய் சரவணனும் பக்க பலமாக இருக்கிறார்கள்.

அந்த கிராமத்துக்குள் கனிம வளங்கள் இருப்பதை அறிந்து கார்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்க வருகின்றன. இதற்காக அவர்களை வெளியேற்ற இரு தெரு மக்களிடமும் பிரிவை உண்டு பண்ணி கலவரத்தை ஏற்படுத்த மந்திரியும், எம்.எல்.ஏ.வும் சதி செய்கின்றனர். அது நடந்ததா என்பதுதான் படத்தின் கதை.

சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் இயல்பையும் இப்படம் எடுத்துச் சொல்கிறது.


கதல் (Kathal – இந்தி) – நெட்பிலிக்ஸ்

ஒரு எம்.எல்.ஏவின் வீட்டில் உள்ள உயர்ந்த ஜாதி பலாமரத்தில் இருந்து 2 பலாக்காய்கள் காணாமல் போகின்றன. அந்த பலாக்காயில் ஊறுகாய் போட்டு முதல்வருக்கு கொடுத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏவுக்கு இது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. அதை கண்டுபிடித்து தரும்படி போலீஸாருக்கு நெருக்குதல் கொடுக்கிறார்.

பலாக்காய்க்கு முக்கியத்துவம் கொடுத்து தேடும் போலீஸார், அதே ஊரில் காணாமல் போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனைப்பார்த்து மனம் வருந்தும் பெண் இன்ஸ்பெக்டர் ஒரு தந்திரம் செய்கிறார். அது என்ன? அதனால் பலாக்காயும், காணாமல் போன பெண்ணும் கிடைத்தார்களா என்பதுதான் இப்படத்தின் கதை.

பலாக்காயைப் பற்றிய காமெடி படமாக ஆரம்பத்தில் தெரிந்தாலும், பின்னர் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள், ஜாதிக் கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி தீவிரமாக சொல்கிறது படம்.

யசோவர்த்தன் மிஸ்ரா இயக்கியுள்ள இப்படத்தில் சான்யா மல்ஹோத்ரா, ஆனந்த் ஜோஷி, விஜய் ராஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


பாச்சுவும் அத்புத விளக்கும் (Pachuvum Athbutha Vilakkum – மலையாளம்) – அமேசான் ப்ரைம்

வாழ்க்கையில் அதிக லட்சியங்கள் ஏதும் இல்லாத ஒரு பகத் பாசிலுக்கு, ஒரு வயதான பெண்மணியை மும்பைக்கு ரயிலில் கொண்டுசெல்லும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அந்த பெண்மணி, வழியில் அவரை ஏமாற்றி, கோவாவில் இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து பகத் பாசிலும் இறங்குகிறார். இதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும், அதை பகத் பாசில் எப்படி எதிர்கொண்டார் என்பதும்தான் படத்தின் கதை.

ஃபீல் குட் டைப் படமான இதை ஆரம்பம் முதல் கடைசிவரை தன் முதுகில் சுமந்து செல்கிறார் பகத் பாசில். அவருக்கு ஈடுகொடுத்து இன்னசெண்ட், முகேஷ், வினீத் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். குறிப்பாக வினீத்தின் அம்மாவாக நடிக்கும் அந்த வயதான பெண்மணியைக் குறிப்பிடலாம்.
டென்ஷன், வன்முறை, ஆபாசம் இல்லாத படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.


தமிழரசன் (தமிழ்) – ஜீ5

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட் , ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்த படம் தமிழரசன்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியின் மகனுக்கு இதயத்தில் கோளாறு. சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் 70 லட்சம் ரூபாய் கேட்கிறது. பணம் கட்டினால் மட்டுமே அறுவைச் சிகிச்சை செய்யமுடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, பணம் இல்லாதாதால் ஒரு கட்டத்தில் துப்பாக்கி முனையில் மருத்துவமனையை முடக்குகிறார் விஜய் ஆண்டனி.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...