ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.
சென்னையில் இன்று நடக்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுகிறதோ என்ற விவாதம் இருந்து வந்தது. இந்த சூழலில் நூல் வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திருமாவளவன் அறிவித்தார்.
விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்காதது ஏன் என்பது...
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. 7-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். அன்றே டெல்லி புறப்பட்டு சென்ற பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர்...
மைக்கேல் தங்கதுரை - கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஆதரவற்ற கவிப்பிரியா காதலனை உயிராக நினைக்கிறாள். காதலனின் தொழில் தொடங்க 6 மாதங்களுக்கு மட்டும் ஒரு வீட்டில் வேலைக்கு சேருகிறாள். அது ஒரு மலை பகுதியில்...
நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது முதல் சதத்தை அடித்தார். இந்த சதத்தை அடிக்கும்போது சச்சினின் வயது 17.
இந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.