No menu items!

நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்திருக்கும் ‘லியோ’ படம் மீது எக்கச்சக்க எதிர்பார்புகள்.

தனி விமானம் பிடித்து விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் எல்லோரும் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றதிலிருந்து சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட கமெண்ட்கள்.

கொட்டிக்கிடக்கும் பனி, மரத்தில் இரண்டு குரங்குகள் என தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்தபடியே ஒரு வீடியோவை எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார் த்ரிஷா.

இதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

’லியோ’ என்று படத்தின் டைட்டிலை அறிமுகப்படுத்தியதனால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள், ஷூட்டிங் தொடங்கிய மூன்றே நாட்களில் காஷ்மீரிலிருந்து தனது லக்கேஜ்ஜை எடுத்துகொண்டு சென்னைக்கு திரும்பியிருக்கிறார் த்ரிஷா.

‘கில்லி’ படத்திற்குப் பிறகு விஜயும், த்ரிஷாவும் இணைவதால், இதில் ஹீரோயினாக த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், மூன்று நாட்களிலேயே ஷூட்டிங்கை முடித்து கொண்டு திரும்பியதால் நெட்டிசன்கள் லோகேஷ் கனகராஜை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

காஷ்மீரில் வழக்கம் போல வில்லன் விஜயின் மனைவியான த்ரிஷாவைக் கொன்றுவிடுகிறார். கோபம் கொண்டு விஜய் வில்லன்களை சிங்கம் போல பழிவாங்குகிறார். இதுதானே லியோ கதை என்று கமெண்ட்களை தட்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் த்ரிஷாவுக்கு என்ன கதாபாத்திரம், என்னென்ன காட்சிகள் இருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் இப்படி கமெண்ட் அடிப்பது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் என்பதால் ஒரு குறைந்தப்பட்ச தகவல்களையாவது லியோ படக்குழுவினர் வெளியிடலாம்.


கண்டிஷன்கள் போடும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த ஹிந்திப்படங்கள் எதுவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் சோஷியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. அடிக்கடி கவர்ச்சிப் படங்களை வெளியிடுவதால் இவருக்கு ஃபாலோயர்கள் மிக அதிகம்.

ஜான்வி கபூருக்கு சோஷியல் மீடியாவில் இந்த பாப்புலாரிட்டியை வைத்து அவரை இங்கே நடிக்க வைக்கலாம் என்று பலர் முயன்று பார்த்துவிட்டார்கள். ஆனாலும் ஜான்வி கபூர் யாருக்கும் பிடிகொடுக்கவே இல்லை.

நடித்தால் பெரிய கமர்ஷியல் ஹீரோக்களுடன் நடிப்பேன் என்று ஜான்வி கபூர் அடம்பிடிக்கிறாராம். ஆனால் இங்கு அஜித் போனி கபூருடன் இணைந்து 3 படங்கள் பணியாற்றிய பிறகும் கூட ஜான்வி கபூருடன் இணைந்து நடிக்கவில்லை. அதே போல் விஜய் தரப்பிலும் ஜான்வி கபூரை கமிட் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

இரண்டாம் கட்ட நடிகர்கள் தங்களது படங்களுக்கு ஜான்வியைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் போனி கபூர் அதற்கு ஒகே சொல்லவில்லை.

ஜான்வி கபூர் அடம் பிடிப்பது ஒரு பக்கமிருந்தாலும், அவரை அணுகிய இரண்டாம் கட்ட ஹீரோக்கள் கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறார்களாம்.

காரணம், ஜான்வி கபூர் போடும் கண்டிஷன்கள். சம்பளம் 3 கோடி, அஸிஸ்டென்களுக்கு போக வர ப்ளைட் டிக்கெட்கள், தங்குவதற்கு ஹோட்டல் ரூம்கள், ஆயிரக்கணக்கில் பேட்டா என லிஸ்ட் நீள்கிறதாம்.

இந்நிலையில்தால் ஜான்வி கபூர் இதுவரையில் எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அதனால் தேவையில்லாத கிசுகிசுக்களைக் கிளப்பாதீர்கள் என்று அவரது அப்பா போனி கபூர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

ஜான்வி இங்கு யாரோ ஒரு புது நடிகையைப் போல அறிமுகமாவதை போனி கபூர் விரும்பவில்லை. அதன் வெளிப்பாடே இந்த ஒபன் கமெண்ட் என்கிறார்கள்.


ஏகே62-ல் சர்தார் இயக்குநரா?

ஏகே 62 தான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு.

விக்னேஷ் சிவன் இல்லையென்றதுமே, விக்னேஷ் சிவன் நீக்கத்திற்கு என்ன காரணம்? அப்படியானால் ஏகே 62-ஐ இயக்கப் போவது யார் என்ற கேள்விகளுக்கு இன்னும் முழுமையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

துணிவின் வெற்றியும், விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியும் தான் விக்னேஷ் சிவனின் நீக்கத்திற்கு காரணம் என்கிறார்கள்.

லியோ ஒரு பக்காவான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பதால் அதற்கு போட்டியாக ஆக்‌ஷன் கதையை இறக்கினால்தான் பாக்ஸ் ஆபீஸில் போட்டி இருக்கும் என்பதால்தான் இந்த மாற்றம் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் யார் என்பதை லைக்காவே முடிவு செய்யட்ட்டும் என அஜித் ஒதுங்கிக் கொண்டாராம். இதனால் மளமளவென கதை கேட்கும் வேலைகளில் இறங்கிய லைக்கா, மகிழ் திருமேனி கதையைக் கேட்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸூம் கொடுத்திருப்பதாக ஒரு தகவல்.
இந்நிலையில் சர்தார் பட இயக்குநர் மித்ரனும் ஏகே62-ல் இருக்கிறார் என்று ஒரு புதிய கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

மித்ரன் கதையை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார் என்றும் இந்த கிசுகிசு தொடர்கிறது.

விதவிதமான கிசுகிசுக்கள் கிளம்பினால் அது ஏகே 62-க்கு நல்லதல்ல என்று அஜித் நினைக்கிறாராம்.

இதனால் லைக்கா இன்னும் 10 நாட்களுக்கு ஏகே62 பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...