No menu items!

குண்டு – ஒல்லி இணைக்கு செக்ஸ் பிரச்சினையாகுமா? – டாக்டர் நாராயண ரெட்டி

குண்டு – ஒல்லி இணைக்கு செக்ஸ் பிரச்சினையாகுமா? – டாக்டர் நாராயண ரெட்டி

முந்தைய பகுதிகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் பப்லு – ஷீத்தல் திருமணங்களைத் தொடர்ந்து ‘ஏஜ் கேப் ரிலேசன்ஷிப்’ சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆனது. இதையொட்டி ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் நாராயண ரெட்டி அளித்த பேட்டியின் தொடர்ச்சி இங்கே.

‘பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுபோனதும் சில வருடங்கள் சில பிரச்சினைகள் இருக்கும். மன அழுத்தம், எரிச்சல், கோபம் வரும். மேலும், பிறப்புறுப்பில் நீர் ஊறுவது குறைந்து வறட்டுத்தன்மை ஏற்படும். இதனால் செக்ஸில் நாட்டம் குறையும்.  ஹார்மோன் அளவு குறைவதால் உடனே ஏற்படும் பிரச்சினைகள் இவை. ஆனால், விரைவிலேயே உடல் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு தயாராகிவிடும். மீண்டும் உடலுக்கு செக்ஸ் தேவைப்படும். இதை கணவன் – மனைவி இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு செக்ஸ் தேவையில்லை என்பதால் தனது இணைக்கும் தேவையில்லை என்று இருந்தால், கணவனோ மனைவியோ தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள திருமண உறவுக்கு வெளியே வழியை தேடிக்கொள்ள வழிவகுப்பதுபோல் ஆகிவிடும்.

பொதுவாக பெண்கள் வயதான நிலையில், குறிப்பாக மெனோபாஸ் நின்றுபோன பின்னர், செக்ஸ் மீதான நாட்டம் குறைந்ததும் இனி தங்களுக்கு  உடலுறவு தேவையில்லை என நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம்.

‘Use it or Lose it’ என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. எந்தவொரு பொருளையும் பயன்படுத்தவில்லை என்றால் இழந்துவிடுவீர்கள்.

வயதானவர்களிடம் சும்மாவே இருக்காதீர்கள்; குறுக்கெழுத்து போட்டியில் கலந்துகொள்ளுங்கள், பத்து பேரிடம் பேசுங்கள் என்று டாக்டர்கள் ஆலோசனை சொல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். இல்லையென்றால் அவர்களுக்கு நினைவு சக்தி குறைந்து, அல்சைமர் வந்துவிடும். மூளையை பயன்படுத்தாமல் இருப்பதன் விளைவு இது.

இதுபோல் நீண்ட தூரம் இல்லாவிட்டாலும் கொஞ்ச தூரமாவது நடந்துவிட்டு வாருங்கள் என்று சொல்வோம். அப்படி கொஞ்சம்கூட நடக்காமல் இருந்தால் கால் முட்டு இணைப்புகள் விறைப்பாகிவிடும். நடப்பது மேலும் சிரமமாகிவிடும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள், இயந்திரங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக நீண்ட நாட்கள் எடுக்காமல் இருக்கும் காரை ஸ்டார்ட் செய்து ஆஃப் செய்து வைப்பதை பார்த்திருக்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். பயன்படுத்தாமல் இருந்தால் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பிறப்புறுப்புகள் அதன் பயன்பாட்டை மறந்துவிடும்.  பெண் பிறப்புறுப்பு சுருங்கி, சிறுத்துவிடும்.

சரி, மெனோபாஸ் நின்றுபோன பெண்கள் செக்ஸில் ஈடுபட என்ன செய்ய வேண்டும்?

பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுபோன பிறகு ஹார்மோன், குறிப்பாக பெண் பாலின இயக்குநீரான ஈஸ்ட்ரோசன் தயாரிப்பு குறைந்துவிடும். கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லலாம். இதனால் பிறப்புறுப்பில் நீர் ஊறாது. இதனால் பெண் பிறப்புறப்பு வறண்டு விடும். இதற்கு சிகிச்சை உள்ளது.

மருத்துவர்களை கலந்தாலோசித்தால் ஈஸ்ட்ரோசன் தயாரிப்புக்கு மருந்து கொடுப்பார்கள். ஊசி, மாத்திரை, பெண் பிறப்புறுப்பில் உள்ளே தடவும் நிலையில் உள்ள க்ரீம் என மூன்று வடிவங்களில் இதற்கான மருந்து உள்ளது. மேலும், செயற்கையான ‘லூப்ரிகன்ட்’களும் உள்ளன. இதையும் பயன்படுத்தலாம். இவை ஆபத்தில்லாத அனுகுமுறைகள். சிலர் வழவழப்புக்காக எண்ணெய் உபயோகிப்பார்கள். அது ஆபத்தானது. பெண் பிறுப்புறுப்பின் உட்புறத்தில் இது காயங்களை ஏற்படுத்தலாம்.

இதுவரை பப்லு – ஷீத்தல் ஜோடி பற்றி, அவர்களிடையேயான அதிகமான வயது வித்தியாசம் பற்றி பார்த்தோம். இனி ரவீந்தர் – மகாலட்சுமி விஷயத்துக்கு வருவோம். இதில் ரவீந்தர் மிக குண்டாக இருக்கிறார். மகாலட்சுமி மிக ஒல்லி. இப்படி தம்பதிகள் உடலமைப்பு மிக வித்தியாசமாக இருப்பது அவர்களது தாம்பத்தியத்தை பாதிக்குமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டது.

அழகு என்பது பார்ப்பவர்கள் கண்களில்தான் இருக்கிறது. அதன்படி மகாலட்சுமிக்கு ரவீந்தரும் ரவீந்திரருக்கு மகாலட்சுமியும் அழகானவர்களாக தெரிந்திருக்கலாம்.  அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. ஆனால், உண்மையில் தாம்பத்தியத்தைப் பொறுத்தவரை உடலமைப்பு இரண்டாம் பட்சமானதுதான். ஜோடிகளில் ஒருவர் மிக குண்டாக இருப்பதும் ஒருவர் மிக ஒல்லியாக இருப்பதும் அவர்கள் தாம்பத்தியத்தை பாதிக்காது” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...