தமிழ்நாட்டில் அழியாத ஒரு பிரச்சனையாக கருதப்படுவது இந்தி மொழித் திணிப்பு. இந்திதான் தேசிய மொழி என்று மத்தியிலிருந்து காலங்காலமாக அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் இந்தியை காட்டமாக தொட்டிருக்கிறார்.
இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
பரத் வித்தியாசமான தோற்றத்துடன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேடி அலையும் ஆட்டோ டிரைவராக வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கிறார்.