No menu items!

‘mmmm….i am lost’ – நயன்தாராவுக்கு என்ன நடக்கிறது?

‘mmmm….i am lost’ – நயன்தாராவுக்கு என்ன நடக்கிறது?

‘mmmm….i am lost’ – இப்படி ஒரேயொரு வரியைதான் நயன்தாரா தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.

ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களிலும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கு இடையே மோதல். இருவரும் பிரியப் போகிறார்களா…என்று ஏராளமான கேள்விகள். தாராளமான யூகங்கள்.

உண்மையில் என்ன நடந்தது… என்ன நடக்கிறது…

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் சின்னச்சின்ன மன வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளிடையே மன வருத்தங்கள் இல்லாமலிருக்க எப்படி வாய்ப்பில்லையோ அப்படிதான் நயன் – விக்கி விஷயத்திலும் நடந்திருக்கிறது.

முதலில் நயன்தாராவைப் பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

நயன்தாராவுக்கு காதலோ, அன்போ, கோபமோ எதுவாக இருந்தாலும், ஜோதிடத்தில் அடிக்கடி உபயோகிக்கும் உச்சம், நீச்சம் என்ற இரு வார்த்தைகளுக்கு ஏற்றவாறுதான் இருக்கும்.

அன்பு காட்டினால் அதில் உச்சம்  இருக்கும், அதுவே கோபம் வந்தால் அந்த உச்சத்தில் இருக்கும் அன்பு நீச்சம் அடைந்துவிடும். அதேபோல் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர் நயன்தாரா. திரை அழகு இருக்கும் அளவிற்கு பிடிவாதமும் இருக்கிறது. இதனால் தான் நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார். அவரது பிடிவாதமே அவருக்கு ப்ளஸ் மற்றும் மைனஸ் ஆக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்கள். நயன்தாராவுக்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணியில் ’நம்பர் 1’ கதாநாயகியாக இருக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமுண்டு.

இதற்காகவே தனது இடையழகை கவர்ச்சிகரமாக வைத்திருக்க, அறுவைசிகிச்சை செய்துகொண்டார் நயன்தாரா. இப்படியொரு அறுவைசிகிச்சையை செய்தால், அவருக்கு குழந்தைப்பேறு இருக்காது என்பது முன்கூட்டியே மருத்துவர்கள் குழு தெரிவித்துவிட்டது.

அப்போது நயன்தாராவுக்கும் பிரபுதேவாவிற்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு முறிந்த நேரம். வாழ்க்கை மீதான வெறுப்பில் இருந்த நயன்தாரா, இனி நடிப்புதான் வாழ்க்கை என முடிவு செய்தார். முன்னணி நடிகை என்ற இடத்தைத் தக்கவைக்க அழகு முக்கியம். எனவே அந்த அறுவைசிகிச்சையை செய்ய ஒப்புக்கொண்டார். இதிலிருந்தே. நயன்தாராவின் பிடிவாதம் எந்தளவிற்கு இருக்கும் என்பது புரிந்திருக்கும்.

ஏன் விக்னேஷ் சிவன்?

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில், சிம்புவுடன் நயன்தாரா நெருங்கி பழகிய போது இருந்த உறவை காதல் என்று சொல்வதைவிட ஈர்ப்பு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இருவருக்கும் இடையே இருந்த ஈர்ப்பு,  எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்ற விதியின் அடிப்படையிலேயே இருந்தது.

இவர்கள் இருவருக்கும் மற்ற விஷயங்களில் கருத்துகள் எதிரெதிர் துருவமாக இருந்ததால், இந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அடுத்து, பிரபுதேவாவுடனான உறவை, நயன்தாரா ரொம்பவே நம்பியிருந்தார். காதல் கசிந்து உருகியது. தனது சம்பாத்தியத்தில் இருந்து பிரபுதேவாவிற்கு துபாயில் நடனப் பள்ளியை தொடங்கினார். எங்குச் சென்றாலும், விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி வாங்கிக் கொடுப்பார் நயன்தாரா.

இவர்களுக்கு இடையேயான உறவு, நயன் தனது கையில் பிரபு என டாட்டூ குத்திக்கொள்ளுமளவிற்கு மாறியது. திருமணம்தான் அடுத்து என்றபோது, கருத்து வேறுபாடு. காரணம் பிரபுதேவா  ’டேக் இட் ஈஸி பாலிசி’யில் வாழ்பவர். நயன்தாரா அப்படியில்லை.

பிரபுதேவாவுடனான உறவு முறிந்துப் போனதில், கவலையில் கரைந்துப் போனார் நயன்தாரா. இதற்குப் பிறகுதான் மீடியா பக்கம் அதிகம் தலைக்காட்டாமல் தவிர்த்து வந்தார். முடிந்தவரையில் தனிப்பட்ட வாழ்க்கையை சுருக்கிக்கொண்டார்.

ஏறக்குறைய விரக்தியின் வீச்சு அதிகமிருந்த போதுதான், விக்னேஷ் சிவன் நயன் வாழ்வில் நுழைந்தார்.

ஒரு படத்திற்காக கதையைச் சொல்ல போனவர், கால்ஷீட்டுடன் நயன்தாராவின் காதலை வாங்கிவிட்டார். சின்னச்சின்ன விஷயங்களிலும் அக்கறைக் காட்டுவது விக்னேஷ் சிவனின் பழக்கம். இப்படிதான் நயன்தாராவுடன் இருந்த தருணங்களில் காதலில் டீடெய்லிங் செய்து காட்டுவதையும் இவர் விட்டுவிடவில்லை.

இதில் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்த நயன்தாராவுக்கு மாறுதல் கிடைத்தது போன்ற உணர்வு.

குழந்தை இல்லாவிட்டால் என்ன. உங்களை நான் குழந்தைப் போல் பார்த்துகொள்கிறேன் என்ற போது, விக்னேஷ் சிவன் கைகளில் குழந்தையைப் போல் மாறியிருந்தார்.

இந்த காதல்தான் திருமணம் வரை நயன்தாராவை திருமணம் வரை யோசிக்க வைத்தது.

அப்படிப்பட்ட காதலில் இப்போது என்ன ஆயிற்று என்ற கேள்விகள் அதிகம் எழுந்திருக்கின்றன.

இது குறித்தும் கேட்ட போது, விஷயம் கொஞ்சம் தடுமாற்றத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

நயன்தாரா நடிக்க வந்த பிறகு, அவர் தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது இல்லை. சினிமாவில் ஷூட்டிங்கிற்கு அவர் கொடுக்கும் நேரம் கூட குடும்பத்தினருக்கு கொடுப்பது இல்லை. ஆனால் தான் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினருக்கு செலவழிப்பதில் நயன்தாரா கொஞ்சம் கூட தயக்கம் காட்டியது இல்லை.

ஆனால் விக்னேஷ் சிவனுக்கு அவருடைய குடும்பத்தினருடன் நெருங்கிப் போகும் சந்தர்ப்பங்கள் திருமணத்திற்கு பிறகு குறைந்து போய்விட்டன. திருமணத்திற்கு கூட விக்னேஷ் சிவன் சொந்தங்களை அதிகம் அழைக்கவில்லை. இது அப்போது அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருந்தது இல்லை.

ஆனால் இப்போது இரு மகன்கள் என்று வந்தப்பிறகு விக்னேஷ் சிவன் குடும்பத்தாருக்கு ஒரு ஆதங்கம். பேரப்பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லையே என்று.

அடுத்து, நயன்தாரா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் பேசி, அஜித் நடிக்கப் போகும் படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரெடுக்க கிடைத்த அருமையான வாய்ப்பை விக்னேஷ் சிவன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற கோபம் நயனுக்கு இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவுக்கு என்று தனியாக சினிமா வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முன்னணி ஹீரோக்களும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க பெரிய ஆர்வம் காட்டவில்லை என்பது ஒருபக்கம். அடுத்து அவர் நடித்தப் படங்கள் வசூல்ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை. இந்த இரண்டும் மனதிற்குள் ஆதங்கமாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.

இதனால் பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், ஷில்பா ஷெட்டியைப் போல பிஸினெஸ்ஸில் ஆர்வம் காட்டிவருகிறார் நயன்தாரா. படங்கள் இல்லாமல் போனாலும், வருமானத்திற்கு வழி இருக்குமே என்பதற்காகதான் இந்த  திட்டம்.

பிஸினெஸ் ஓகே என்றாலும், ரவுடி  பிக்சர்ஸ் மூலம் படங்களைத் தயாரிக்க வேண்டுமென விக்னேஷ் சிவன் விரும்புவதாக சொல்கிறார்கள். ஆனால் இதில் நயனுக்கு பெரிய விருப்பமில்லை. இது அவர்களுக்குள் ஒரு விவாதமாக மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதேபோல் நயன் ஷூட்டிங்கிற்காக வெளி இடங்களுக்கும் செல்லும் போது, விக்னேஷ் தன்னுடைய ’வட்டத்தில்’ இருப்பவர்களுடன் ’’ஐக்கியமாகி’ விடுகிறார். இதுவும் அவர்களுக்குள் புகைச்சலை உருவாக்கி இருக்கிறதாம்.

இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன.. இது தீவிரமடைந்து வருவதும் உண்மைதான் என்கிறார்கள்.

மற்றப்படி நயன்தாரா அன்ஃபாலோ செய்தது, உடனே விக்னேஷ் சிவன் அவர்கள் இருவரும் இருக்கும் வீடியோவை வெளியிட்டது. ம்ம்ம்ம்  ஐயம் லாஸ்ட் என்று நயன் பதிவிட்டது எல்லாமே மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு யுக்தியே என முணுமுணுகிறார்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...