No menu items!

மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம்: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம்: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிளகாய் மண்டலம் செயல்படுத்தப்படும்.

தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்.

உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

பாட்னா ரயில் நிலைய விளம்பர திரைகளில் ஆபாச காட்சிகள்: பயணிகள் அதிர்ச்சி

பிகாரின் பாட்னா ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த டிவி திரைகளில் விளம்பரங்களுக்குப் பதிலாக சுமார் மூன்று நிமிடங்களுக்கு வயது வந்தோருக்கானதாக கருதப்படும் ஆபாச காணொளி ஒளிபரப்பானதால் அதைப் பார்த்த பயணிகள் திகைத்துப் போனார்கள். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் நிலையத்தின் நெரிசல் நேரத்தில் காலை 9:30 மணியளவில் நடந்திருக்கிறது. பயணிகளில் சிலர், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) ஆகியவற்றிடம் உடனடியாக இந்த காட்சிகள் குறித்து புகார் அளித்தனர்.

இதற்கிடையில், இந்த காணொளியை சில பயணிகள் தங்களுடைய செல்பேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சிலர், அந்த காணொளிகளுக்குரிய பதில் இடுகையில் பதிவிட்டுள்ளனர்.

ஆபாச நடிகையுடன் தொடர்பு: ட்ரம்ப் கைதாகலாம் என நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுடன், 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் ட்ரம்பை அவர் சந்தித்தாகவும். கலிபோர்னியா – நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை ட்ரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ட்ரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை ட்ரம்ப் எவ்வாறு ஈடுபட்டினார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த வழக்கில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெளியே இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான், இவ்வாரம் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும், கைரேகைகள் பெறப்படும், புகைப்படங்களும் எடுக்கப்படும் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குநருக்கு ரூ. 1 கோடி பரிசு: முதல்வர் மு.. ஸ்டாலின் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் பொம்மன், பெள்ளி தம்பதி ஈடுபட்டிருந்தனர். இதை மையமாக வைத்து ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார். இந்த படத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...