தில்லி, என்சிஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமா்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ), இந்தியா போஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. என்ன காரணம்? இதன்பின்னணி என்ன? கார்டுதாரர்கள் செய்ய வேண்டியது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தேசிய அளவில் பாஜக ஆதரவாளர்களும், தமிழக அளவில் திமுக ஆதரவாளர்களும் சந்தோஷப்படும் வகையில் வெளியாகி இருக்கிறது டைஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.
உத்தம வில்லன் திரைப்படம் ஒரு தோல்விப் படமல்ல என்று லிங்குசாமி கூறியதாக ஒரு யூடியூப் சானலில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.