No menu items!

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழு – ஓபிஎஸ் மேல்முறையீடு

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழு – ஓபிஎஸ் மேல்முறையீடு

ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டபிறகே, ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு மீது முடிவு எடுக்க இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புவானிலை மையம் தகவல்

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளையும் மறுதினமும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

அரசு அனுமதி தராவிட்டால் திருச்சியில் சிவாஜி கணேசன் சிலையை நானே திறப்பேன்: சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர் பெருமக்களால் திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டுப் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட சிலையைத் திறக்க பலமுறை முயற்சித்தும் பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் அனுமதி தரப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் திமுக அரசும், கடந்த அதிமுக அரசினைப்போலவே சிலையைத் திறக்க அனுமதி மறுப்பது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மக்கள் அனைவரிடமும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சிலையைத் திறக்கவேண்டி ரசிகர்கள் சார்பில் ஆட்சியாளர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பலமுறை முறையிட்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அனுமதி அளிக்கப்படாதது அவரது மங்காப் புகழ் மீதான காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை. மேலும் தாமதித்தால் நடிகர் திலகத்தின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அவரது ரசிக பெருமக்களின் முன்னிலையில் நான் முன்னின்று சிலையை திறப்பேன் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிதிஷ் குமார் சந்திப்பு

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.   இந்நிலையில், இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். கெஜ்ரிவாலை சந்திக்கும் முன்பாக சிபிஐ (எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சிதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்.

மூக்கு வழியே செலுத்தும் கோவிட் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, டிஜிசிஏ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அணையம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்ட அறிக்கையில், “கோவிட்டிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் புது உத்வேகம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர காலத்தில் டிஜிசிஏ ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, கோவிட்டிற்கு எதிரான நமது போராட்டத்திற்கு புதிய பலத்தை வழங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...