No menu items!

ரிஷப் பந்த் 2 வருடம் ஆட முடியாது – கங்குலி தந்த ஷாக்

ரிஷப் பந்த் 2 வருடம் ஆட முடியாது – கங்குலி தந்த ஷாக்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்லி இருக்கிறார் பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி. கார் விபத்தில் காயமடைந்து இப்போது ஓய்வில் இருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும் என்பதே அந்த ஷாக் செய்தி.

கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி ரிஷாப் பந்த் பெரிய விபத்தில் சிக்கினார். இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெறாததால் டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்த போது உத்ரகாண்ட்டில் உள்ள ரூர்க்கியில் விபத்து நடந்தது.

ரிஷாப் ஓட்டிச் சென்ற கார் திடீரென சாலையில் அலைபாய்ந்து தடுப்புகளில் மோதி தீப்பற்றியது. அதிகாலை 5.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அந்தப் பக்கம் வந்த சிலர் ரிஷாப்பை கார் கண்ணாடியை காப்பாற்றினார்கள்.

அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரிஷப் பந்த், பி மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காலில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் இப்போது ஓய்வெடுத்து வருகிறார் ரிஷப் பந்த். காயம் காரணமாக இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரிலும், உலகக் கோப்பைக்கான தொடரிலும் ரிஷப் பந்த் ஆடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக உள்ளார். அவர் காயமடைந்திருப்பதால் டெல்லி டேர்டெவில் அணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ரிஷப் பந்த்தின் காயம் குறித்து செய்தியாளர் அவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சவுரவ் கங்குலி, “நான் ரிஷப் பந்த்தை அடிக்கடி தொடர்புகொண்டு அவரது காயம் பற்றி விசாரித்து வருகிறேன். காயங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த அறுவைச் சிகிச்சைகளால் அவர் கடினமான நேரத்தைக் கடந்து வருகிறார். இந்த காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு 1 முதல் 2 வருடங்களாவது ஆகும்” என்றார்.

ரிஷப் பந்த் ஆட வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும் என்பதால், அணிக்கு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் பணியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. அதேபோல் அவருக்கு பதிலாக உள்ளூர் இளம் வீரர்களான ஷெல்டன் ஜாக்சன் அல்லது அபிஷேக் போரெல் ஆகிய இருவரில் யாரையாவது விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாமா என்றும் யோசித்து வருகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக ரிஷப் பந்த் கருதப்பட்டார். உலகக் கோப்பை தொடரில் பந்த் ஆடமாட்டார் என்ற நிலையில் அவருக்குப் பதில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சனுக்கு பயிற்சி கொடுக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...