No menu items!

IPL Diary : சிஎஸ்கேவுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

IPL Diary : சிஎஸ்கேவுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

பிராவோவுக்கு மாற்றாக ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பார் என்று நினைத்துதான் பென் ஸ்டோக்ஸை வாங்கியது சிஎஸ்கே. ஆனால் ஐபிஎல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த தொடரில் ஸ்டோக்ஸ் பந்து வீசுவது சந்தேகம் என்ற செய்தி சிஎஸ்கே ரசிகர்களை நோகடித்துள்ளது.

இதுபற்றி விசாரித்தால், முட்டியில் ஏற்பட்ட காயம் மற்றும் ஆஷஸ் தொடர் காரணமாக தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ள பென் ஸ்டோக்ஸ் விரும்புகிறார். அதனால் அவர் இந்த ஐபிஎல்லின் முதல் சில போட்டிகளில் பந்துவீச மாட்டார். ஆனால் அணிக்கு தேவையான முக்கிய போட்டிகளில் அவர் பந்துவீசுவார் என்கிறது சிஎஸ்கே வட்டாரம்.

ஆல்ரவுண்டராக செயல்பட முடியாத நிலையில் தோனிக்கு மாற்றாக பென் ஸ்டோக்ஸை பினிஷராக களம் இறக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. இதனால் மேலும் அதிரடியாக பேட்டிங் செய்ய பயிற்சி பெற்று வருகிறார் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங்கில் ஏமாற்றாமல் இருந்தால் சரி.

கேப்டனின் கட்டளை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்காக முழு உடல்நலத்துடன் இருக்க, ஐபிஎல்லில் ஆடும் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க சக வீரர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. அத்துடன் மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாக தானும் சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

நாட்டுக்காக ஆடுவதைவிட பணத்துக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட ஆர்வம் காட்டும் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் கிளப் கிரிக்கெட்டைவிட நாட்டுக்காக ஆட ஆர்வம் காட்டும் ரோஹித்தின் முடிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. ரோஹித் சர்மா ஆடாத போட்டிகளில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ரோஹித்தின் பாணியை மற்ற மூத்த வீரர்களும் கடைபிடித்தால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைக்கு எல்லா வீரர்களும் ஃபிட்டாக இருக்கலாம்.

சாதனைகளைத் துரத்தும் கோலி

இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 3 புதிய சாதனைகளைப் படைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கோலியின் ரசிகர்கள்.

இதில் முதல் சாதனை 7,000 ரன்கள். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 6,624 ரன்களைக் குவித்துள்ளார் விராட் கோலி. ஐபிஎல் வரலாற்றில் இத்தனை அதிகம் ரன்களை எடுத்த வீரர்கள் வேறு யாரும் இல்லை. இந்த அவரிசையில் 6,244 ரன்களைக் குவித்த ஷிகர் தவன்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் 376 ரன்களைக் குவித்து ஐபிஎல்லில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

அடுத்த சாதனை சதங்கள். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை அதிக சதங்களை எடுத்த வீரர் கிறிஸ் கெயில். அவர் 6 சதங்களை அடித்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு அடுத்ததாக கோலி 5 சதங்களுடன் இருக்கிறார். இந்த தொடரில் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் கோலி. ஐபிஎல்லில் அவர் பிடித்துள்ள கேட்ச்களின் எண்ணிக்கை 93. இந்த ஐபிஎல்லில் மேலும் 7 கேட்களைப் பிடித்து அதிலும் அவர் சதத்தை தொடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...