கேன்ஸ் திரைப்பட விழாவை உடைகளின் திருவிழா என்றும் சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ப்பெட்டில் வலம்வரும்போது பல வண்ண உடைகளையும் நவீன மாடல் உடைகளையும் அணிந்து வருவது திரை நட்சத்திரங்களின் வழக்கம். வழக்கமாக ஹாலிவுட் நட்சத்திரங்கள் வண்ண உடைகளில் வந்து கலக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு, இந்திய நட்சத்திரங்களும் பெரிய அளவில் கலந்துகொண்டு அசத்தியுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் பலரையும் கவர்ந்து தீபிகா படுகோனின் சேலைதான். இந்த திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த தீபிகா படுகோன், கருப்பு நிறத்தில் மஞ்சள் நிற பட்டைகளைக் கொண்ட சேலையை அணிந்துவந்தார். பெங்கால் டைகரால் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற வண்ணங்களை வைத்து சபயாசாச்சி முகர்ஜி என்ற இந்திய ஆடை வடிவமைப்பாளார் இதை வடிவமைத்துள்ளார். “உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய சேலைக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது. அதனால் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலையுடன் பங்கேற்பது என் வழக்கம்” என்று இதைப்பற்றி கூறியுள்ளார் தீபிகா படுகோன்.
கருப்பு நிற குர்தா, அதன் மீது ஒரு ஜாக்கெட் என்று மேற்கத்திய பாணி உடையில் இந்த நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார். இதில் அவர் அணிந்திருந்த ஜாக்கெட், ஜிப்புடன் வித்தியாசமான வகையில் தைக்கப்பட்டிருந்தது. சேகர் கபூர் மற்றும் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் வலம் வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றொரு தமிழ் நடிகரான மாதவனும் மேற்கத்திய பாணியில் வெள்ளைச் சட்டை, அதன்மீது கருப்புற வெயிஸ்ட்கோட் அணிந்து கலந்துகொண்டார். அந்த உடைகளுக்கு மேட்ச்சான கூலிங்கிளாஸையும் அவர் அணிந்திருந்தார். அவரது உடைகளை பிரபல பேஷன் டிசைனரான மணிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்திருந்தார்.
ஷலீனா நதானி என்ற ஆடை வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட, கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த கவுனை அணிந்து இந்நிகழ்ச்சியில் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை தமன்னா பாட்டியா. இந்த உடைக்கு ஏற்ற வைரத்தாலான காதணியையும் அவர் அணிந்திருந்தார்.
பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ படத்தில், ‘நான் கோட் சூட் போட்டா உனக்கு பிரச்சனைனா நான் கோட் ஷூட் போடுவன்டா, கால் மேல கால் போடுவேண்டா’ என்ற வசனத்தை அவர் எழுதியிருந்தார். இந்த வசனத்துக்கு ஏற்ப கோட் சூட் அணிந்து கேன்ஸ் விழாவில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதன் வித்தியாசமான உடைகளால் பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் வாய்ந்தவர் ஐஸ்வர்யா ராய். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும் அதற்கு மாற்றமில்லை. கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற ஃபல்குனி ஷேன் பீக்காக் ஜாக்கெட் மற்றும் கருப்பு நிற பேண்டை அணிந்திருந்தார்.