வித்தியாசமான படங்களில் நடிப்பது தாப்ஸியின் ஸ்டைல். அதேபோல் தான் சம்பாதித்ததை சரியான வழியில் முதலீடு செய்வதிலும் தாப்ஸி கில்லாடி.
சொந்தமாக ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படமெடுக்க வேண்டுமென்று சில கமர்ஷியல் ஹீரோக்களுக்கு வரும் அதே ஆசை தற்போது தாப்ஸிக்கும் வந்திருக்கிறது.
சட்டென்று ’அவுட்சைடர்ஸ் ஃப்லிம்ஸ்’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி விட்டார். கவர்ச்சியையும், நட்சத்திர மதிப்பையும் நம்பாமல் கதையை மட்டுமே நம்பி படமெடுப்பதுதான் தாப்ஸியின் எண்ணமாம்.
படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வேகத்தில், தன் தயாரிப்பில் நடிப்பதற்கு எந்த ஹீரோயினை தேர்ந்தெடுக்கலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்த தாப்ஸி தற்போது சமந்தாவை புக் செய்திருக்கிறாராம்.
பார்ப்பவர்களை மிரள வைக்கும் த்ரில்லர் வகையறா கதையில், தனது முதல் தயாரிப்பை ஹிந்தியில் எடுக்க திட்டமிட்டு வருகிறது அவுட்சைடர்ஸ் ஃப்லிம்ஸ்.
வெள்ளித்திரையில் கார்த்தியுடன் கைக்கோர்க்கும் சூர்யா?
அண்ணன் சூர்யாவும், தம்பி கார்த்தியும் வெள்ளித்திரையில் ஓன்றாக தோன்றினால் எப்படியிருக்கும்?
சூர்யாவிடம், கார்த்தியிடமும் நீங்கள் இரண்டு பேரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பீர்களா?
இப்படி பல முறை பல பேர் பல விதமாக சூர்யா, கார்த்தியிடம் கேட்டுவிட்டார்கள்.
பல ஆண்டுகளாக கோலிவுட்டில் ரவுண்ட் அடித்து கொண்டிருக்கும் இந்த கேள்விக்கான பதில் அநேகமாக லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘கைதி -2’- படத்தில் கிடைக்கலாம் என்கிறார்கள்.
’கைதி’ படத்திற்கு கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து பரபரப்பான டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவை நான்கைந்து காட்சிகளிலாவது நடிக்க வைத்துவிடுவது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருகிறாராம்.
சூர்யாவும் ஏறக்குறைய ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
வெகுசீக்கிரம் இது சம்பந்தமாக சோஷியல் மீடியாவில் ஒரு ட்ரெண்ட்டிங்கை கிளப்பிவிடுவார்கள். அதுவரை வேறு ஏதாவது வைரல் கண்டெண்ட்டை கவனிக்கலாம்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.