No menu items!

பாய் ஃப்ரெண்டை பிரிந்த ஸ்ருதி ஹாசன்!

பாய் ஃப்ரெண்டை பிரிந்த ஸ்ருதி ஹாசன்!

கமலின் மூத்த மகள் ஷ்ருதி ஹாசன், இதற்கு முன் இரு நடிகர்களுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டாலும், பின்னர் தனக்கென்று ஒரு வழியைப் பார்க்கலாம் என்று அந்த உறவுகளை முறித்து கொண்டு அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

சிங்கிளாக இருந்த ஷ்ருதி ஹாசனுக்கு அப்போதுதான் ஷாந்தனு ஹசாரிகாவின் நட்பு கிடைத்தது. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு பின்பு லிவ்-இன் உறவுக்கு அழைத்து செல்லும் வகையில் ரொம்பவே நெருக்கமானது. கோவிட் – 19 தாக்கம் அதிகமிருந்த போது இவர்கள் இருவரும் மும்பையில் இருக்கும் ஷ்ருதி ஹாசனின் ஃப்ளாட்டில் ஒன்றாக குடியேறினார்கள்.

சமூக ஊடகங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்தே பல ரீல்களை எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். அந்தளவிற்கு இவர்கள் இருவருக்குமிடையில் நெருக்கமான உறவு இருந்தது.

ஆனால் இப்போது அந்த உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதாம். இவர்கள் இருவரும் இப்போது அதிகம் பேசிக்கொள்வதில்லை என்றும் இந்த சண்டை இன்னும் பெரிதாகவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க இவர்கள் இருவரும் சமூக ஊடகம் ஒன்றில் ஒருவரையொருவர் மாறி மாறி ஃபாலோ செய்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் மாறி மாறி ஃபாலோ நிறுத்தி கொண்டதாகவும் தெரிகிறது.

இதோடு ஷ்ருதி நிற்கவில்லை. அவரது பக்கத்தில் ஷாந்தனு உடன் சேர்ந்து எடுத்த பல காணொலிகளையும் பட்பட்டென நீக்கியும் இருக்கிறார்.

இந்த இரண்டு சமாச்சாரங்களும், இவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் உறவில் விரிசல் உண்டானதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களாகவே ஷ்ருதி ஹாசன் வெளியே எங்கே சென்றாலும், தனியாகவே செல்வதை வாடிக்கையாக்கி விட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

ஷ்ருதி ஹாசனுக்கும், ஷாந்தனுக்குவுக்கு இடையில் இருப்பது காதலின் ஊடலா அல்லது உறவின் விரிசலா என்பது இன்னும் சில நாட்களில் பொது வெளிக்கு வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...