No menu items!

வாத்தி ஹீரோயினுக்கு டும் டும் டும்!

வாத்தி ஹீரோயினுக்கு டும் டும் டும்!

சம்யுக்தா மேனன், உண்மையில் இவர் கேரள நட்சத்திரம். மலையாள சினிமாவில் ப்ரித்விராஜூவுக்கு ஜோடியாக நடித்தாலும், அங்கே இருக்கும் நடிப்பு ராட்சஷிகள் மத்தியில் அதிகம் ஜொலிக்க முடியவில்லை. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருக்கையில் இவரை அப்படியே வாரியணைத்து கொண்டது தெலுங்கு சினிமா.

’விருபாக்‌ஷா’ படம் ஹிட்டாக அமைந்தாலும், அடுத்தடுத்து படங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட ‘வாத்தி’யில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

’வாத்தி’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து, படம் ஓரளவிற்கு ஓடியப்பிறகும் கூட சம்யுக்தா மேனனுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றத்துடன் இருக்கும் சம்யுக்தா மீண்டும் தெலுங்கு சினிமா பக்கமே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

தெலுங்கில் இப்போது அவர் நடித்திருக்கும் ‘டெவில்’ படம் வெளியாகி இருக்கிறது. இது ஒரளவிற்கு ஓடினாலும், அதற்கான மவுசு சம்யுக்தாவுக்கு கிடைக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாமா என சம்யுக்தா யோசித்து வருவதாக தெரிகிறது.

இதற்கு காரணம் தனது நீண்ட நாள் ஆண் நண்பருடன் சம்யுக்தாவுக்கு காதல் உருவாகி இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். இந்த ஆண் நண்பரும் கேரளாவைச் சேர்ந்தவர்தானாம்.

இந்த நண்பர் வேறு மதத்தைச் சேர்ந்தவர். இதனால்தான் திருமணத்தின் போது பிரச்சினைகள் எதுவும் எழக்கூடாது என்பதற்காகவே தனது பெயரில் இருந்த ‘மேனன்’ என்ற தனது சாதிப்பெயரை சம்யுக்தா விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான மேலாளர் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது சம்யுக்தாவிற்கு 28 வயதாகிறது. அதனால் திருமணம் செய்ய இதுதான் சரியான வயது என சம்யுக்தா திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறாராம். அவர்களது திருமண வேலைகள் கேரளாவில் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...