No menu items!

ரஜினியுடன் சேரும் இயக்குநர்கள்!

ரஜினியுடன் சேரும் இயக்குநர்கள்!

ரஜினிகாந்தின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. வயது அதிகமானாலும், உடல்நிலையில் கவனம் கொள்ளவேண்டிய சூழலில் இருந்தாலும், மளமளவென அடுத்தடுத்த படங்களில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டி வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரஜினி வழக்கத்திற்கு மாறாக இளம் இயக்குநர்களுடன் இணைந்து படம் பண்ணுவதிலும் உற்சாகம் காட்டுகிறார் என்கிறார்கள்.

இதனால்தான் அவர் நெல்சனுடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்தார். தற்போது தனது 171-வது படத்தில் ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேலின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜூவுடன் இணையவிருக்கிறார்.

இதற்கு அடுத்து அவர் மீண்டும் இளைய தலைமுறை இயக்குநர்களுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதால், மீண்டும் நெல்சனுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ படத்திலும் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் மற்றொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதில் மாரி செல்வராஜூவுடன் இணையவிருக்கும் படத்தை விஜயின் ‘லியோ’ படத்தைத் தயாரித்த லலித் குமார் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ஒரு கிசுகிசு அடிப்படுகிறது. சன் பிக்சர்ஸ் ‘ஜெயிலர் 2’ படத்தைத் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இப்படி இளைய இயக்குநர்களுடன் சேர்வது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்த ‘முத்து’, ‘படையப்பா’ போன்ற படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாருடன் இணையவும் ரஜினி விரும்புகிறாராம்., அநேகமாக இந்த இருவர் கூட்டணியும் மீண்டும் கைக்கோர்க்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அஜித், விஜய் போன்ற கமர்ஷியல் ஹீரோக்களை விட, தனது பட வரிசையைத் தீர்மானிப்பதில் ரஜினி அதிக வேகம் காட்டுவதைப் பார்த்து கோலிவுட் ஆச்சர்யத்தில் இருக்கிறது.


விஜய் சேதுபதியின் தடாலடி முடிவு!

விஜய் சேதுபதிக்கு ஒரு தனி மவுசை உருவாக்கிக் கொடுத்தது, கதைகளைத் தேர்வு செய்யும் அந்த திறமைதான். இதனால் இவரது படங்களைப் பார்க்கவும், இவரைப் பார்க்கவும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்தார்கள்.

ஆனால் இடையில் இவர் சம்பளத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடிக்க ஆரம்பித்தது இவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் இவர் ஹீரோவாக நடித்தப் படங்கள் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தன. அதேநேரம் இவர் வில்லனாகவோ அல்லது நட்புக்காகவோ நடித்தப் படங்கள் எல்லாம் வசூலில் கல்லா கட்டின.

இதனால் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து கதை சொல்ல போனவர்கள் கூட அவரை வில்லனாக வைத்து கதை சொல்ல ஆரம்பித்தார்கள். இதனால், அவர் அமைதியாக பாலிவுட் பக்கம் கிளம்பிவிட்டார். அங்கே சென்றவர் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு பதிலாக, வெப் சிரீஸ்களில் நடித்தார். இவர் நடித்த இரண்டு வெப் சிரீஸ்களும் வரவேற்பைப் பெற்றன.

இதனால் இவரைத் தேடி பாலிவுட் வாய்ப்புகள் வந்தன. முதல் படம் ‘ஜவான்’. இதில் அட்லீயின் மூலம் விஜய் சேதுபதி எண்ட்ரீ உறுதியானது. அடுத்து இப்போது வெளியாக காத்திருக்கும் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தையும் இயக்கி இருப்பவர் ஒரு தமிழ் இயக்குநர். ஸ்ரீராம் ராகவன்.

இப்படி பாலிவுட்டில் எண்ட்ரீ ஆன விஜய் சேதுபதி, இப்போது தமிழ், தெலுங்கிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் இந்திய முழுவதும் தெரிந்த முகம், தமிழ் தெலுங்கிலும் பரீட்ச்சயமான நடிகர் என . இவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து இவரை ஒப்பந்தம் செய்ய இப்போது பலர் முன் வந்திருக்கிறார்களாம்.

இவர்களிடம் விஜய் சேதுபதி முன்வைக்கும் ஒரே விஷயம். சம்பளம் 30 கோடி. இது உங்களுக்கு ஒகேன்னா நாம் தொடர்ந்து பேசலாம் என்று சொல்கிறாராம்.

30 கோடியா என்று அதிர்ச்சியில் தலைச்சுற்றலுடன் இருப்பவர்கள் பட்டியலில் இப்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட புகழ் ராம் சரணும் அடக்கம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...