No menu items!

பெண்களின் அன்பு வேண்டுமா? இவற்றை செய்யுங்கள்!

பெண்களின் அன்பு வேண்டுமா? இவற்றை செய்யுங்கள்!

பொதுவாகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்கிற கருத்து உண்டு. முக்கியமாக கல்யாண வாழ்க்கையில்!

ஆனால், ஆண்களை பொருத்தமட்டில் எதிர்பார்ப்புகளை தாண்டி பெண்களின் “அட்டென்ஷனுக்காக” பல்வேறு வித்தைகளை கைவசம் வைத்திருப்பார்கள் உதாரணத்திற்கு பைக் வீலிங் செய்வது, படங்களில் காட்டுவது போல ஹீரோயிசம் போன்று ஏதாவது செய்து மொக்கை வாங்குவது, இது போன்று ஏதாவது செய்வதற்கு பதிலாக பெண்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து கொள்வது நல்லது.

அது எப்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். ஒவ்வொருவரின் ஆசைகளும் தனித்துவமாக இருக்கும். அப்படியிருக்கும்போது பொதுப்படுத்த முடியுமா என்ற கேள்வி கேட்கலாம்.

ஆனால் பெண்களுக்கு பொதுவாக சில விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்கவில்லை. அதை தவிர்த்துவிடலாம் என்று உளவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்கள்.

பெண்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களுக்கான சில டிப்ஸ் தான் இது!

மனம் திறந்து பேசுங்கள்

ஆண்கள் பலர் பெரும்பாலும் செய்யும் தவறு வெளிப்படையாக மனதில் பட்டதை பேசாமல் இருப்பது தான் என்று கூறப்படுகிறது. அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனத்திற்குள்ளையே வைத்துக் கொள்வதுதான். மனத்தில் பட்டதை பேசினால் பிரச்சனைகள் வருமோ என்று நினைத்து சொல்லாமல் இருப்பதை விட, சொல்லாமல் இருப்பதனால் தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புகள் நறைய இருப்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்காக, ஏதாவது பேசவேண்டும் என்று சொல்லி உருட்ட ஆரம்பித்து விடாதீர்கள். மனதில் பட்டத்தை தெளிவாக பெண்களிடம் சொல்லுங்கள். அதைதான் அவர்கள் விரும்பிகிறார்கள்.

மரியாதையுடன் நடத்துங்கள்

பெண்கள் என்பதால் மட்டுமில்லை! ஆண், பெண், சிறியவர், பெரியவர் யாராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்த வேண்டும். வெகு காலமாக கல்யாணமாகி வீட்டிலிருக்கும் பெண்களை மரியாதையுடன் நடத்தும் வழக்கம் பெரும்பாலான ஆண்களுக்கு கிடையாது. பெண் தானே என்ற இளக்காரம் ஆண்களிடம் இந்தக் காலத்திலும் இருக்கிறது. இந்த மனநிலை மாற வேண்டும். பெண்கள் தங்களுக்கு மரியாதை கொடுப்பதை விரும்புகிறார்கள். முக்கியமாக அந்த மரியாதை செயற்கை மரியாதையாக இல்லாமல் இயல்பாய் நடக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்.

பெண்களை அலட்சியப்படுத்தாதீர்கள்!

கல்யாணமான தம்பதி மற்றும் விரைவில் கல்யாணத்தில் இணையப் போகிறவர்களாக நீங்கள் இருந்தால் முக்கியமாக இது உங்களுக்கு தான். உங்கள் இணையாள் சொல்வதை சற்று காது கொடுத்து கேட்க பழகுங்கள். “இவளுக்கு வேற வேல இல்ல எப்போ பாரு எதையாசும் பேசிட்டே இருப்பா” என்று அவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தி செல்லாதிர்கள் பிறந்த நாள், கல்யாண நாள் போன்ற முக்கியமான தேதிகளை முடிந்த வரையில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானது தான். தேதியில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாய் கடந்து போகாதீர்கள். தங்களுடைய முக்கியமான தினங்களை ஆண்கள் நினைவில் வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.

Boomer mindset’ லிருந்து வெளியே வாருங்கள்:

காலங்காலமாக சொல்வது போல, பெண்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்கிற மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். துணிந்து பெண்கள் ஏதாவது செய்தால் பொறாமையின்றி பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள், அவர்களின் தன்னபிக்கையை உடைக்க வெளியில் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதே வார்த்தைகளை நீங்களும் பயன்படுத்தி அவர்களை காயப்படுத்தாதீர்கள். உங்களிடமிருந்து அவர்கள் விரும்புவது ஊக்கம். நல்லாருக்கு என்று நீங்கள் கொடுக்கும் ஒரு பாராட்டு பெண்களுக்கு ஒரு மாதத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். அதனால் பாராட்டுங்கள். பெண்கள் என்று அவர்களை தள்ளி வைக்கும் பூமர் மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள்.

சமமாக நடத்துங்கள்:

உங்கள் இணையை மட்டும் அல்ல, அனைத்து பெண்களையும் சமமாக நடத்தப் பழகுங்கள். அனைத்து விதங்களிலும் பெண்கள் சமமானவர்கள்தான் என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள். வேலை செய்யும் இடங்கள், பொது இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பெண்களை சமமாக நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள். சமம் என்பதை வேலைக்குப் போகும் பெண்களை வைத்து மட்டும் முடிவு செய்யாதீர்கள். வீட்டைக் கவனித்துக் கொண்டு பிள்ளைகளை கவனித்துக் கொண்டு இருக்கும் பெண்ணும் சமம்தான். வீட்டின் அன்றாட வேலைகளை ஒருநாள் அந்தப் பெண் கவனிக்கவில்லையென்றால்…யோசித்துப் பாருங்கள். வெளியில் சென்று சம்பாதித்து வரும் நீங்கள் எந்த அளவு முக்கியத்துவமோ அதே அளவு முக்கியத்துவம் வீட்டை நிர்வகிக்கும் பெண்களுக்குமம் உண்டு.

உண்மையாக இருங்கள்

இவை எல்லாவற்றையும் விட ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயம் உண்மையாக இருப்பது. ஏமாற்ற நினைக்காதீர்கள். பெண்கள் புத்திசாலிகள் நீங்கள் ஏமாற்றுவதை சட்டென்று கண்டுபிடித்து விடுவார்கள். உங்களிடமிருந்து மனதளவில் விலகிச் செல்லத் தொடங்கிவிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...