No menu items!

இந்தியாவின் திருமண பட்ஜெட் 425 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியாவின் திருமண பட்ஜெட் 425 லட்சம் கோடி ரூபாய்!

பிரதமர் மோடியின் இந்த வார ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் திருமணம் இடம்பிடித்திருக்கிறது. நம் நாட்டைச் சேர்ந்த சிலர் வெளிநாடுகளில் திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்வதைப் பற்றி அவர் கவலைப்பட்டிருக்கிறார் பிரதமர்.

இதுபற்றி பேசிய பிரதமர் மோடி, “திருமண சீசன் தொடங்கிவிட்டது. இந்த திருமண சீசனில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று சில வர்த்தக அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. எனக்கு நீண்ட காலமாக ஒரு விஷயம் வருத்தத்தை அளிக்கிறது. சமீப காலமாக, சில குடும்பங்கள் வெளிநாடு சென்று திருமணங்களை நடத்தும் ட்ரெண்ட் உருவாகி வருகிறது.

இது தேவையா? மக்கள் தங்கள் திருமண விழாக்களை இந்திய மண்ணில் நடத்தினால், நாட்டின் பணம் நம் நாட்டிலேயே இருக்கும். இந்தியாவில் திருமணத்தை நடத்துவதால் நம் நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். உங்கள் திருமணத்தைப் பற்றி ஏழைகள் கூட தங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வார்கள். உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு தருவதை உங்களால் இன்னும் விரிவுபடுத்த முடியும். நம் நாட்டில் ஏன் இதுபோன்ற திருமண விழாக்களை நடத்தக்கூடாது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்டினேஷன் மேரேஜ் என்ற பெயரில் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் திருமண நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்வதைத்தான் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் விமர்சித்திருக்கிறார். இந்தியாவிலேயே திருமணங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதற்கு காரணம், திருமணங்களுக்காக இந்தியர்கள் செலவு செய்யும் பணம்.

இந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் திருமணங்களுக்காக இந்தியர்கள் 425 லட்சம் கோடி செலவு செய்ய இருக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Confederation of All India Traders அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுக்க சுமார் 35 லட்சம் திருமணங்கள் நடக்க இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தம் 32 லட்சம் திருமணங்கள் நடந்ததாகவும், இந்த திருமணங்களுக்காக 375 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வு கண்டறிந்துள்ள சில செலவு விவரங்கள்…

இந்தியாவில் சுமார் 6 லட்சம் திருமணங்களுக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

சுமார் 10 லட்சம் திருமணங்கள் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து நடத்தப்படுகின்றன.

12 லட்சம் திருமணங்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

50 ஆயிரத்துக்கு மேற்பட்ட திருமணங்களில் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

கல்யாணச் சாப்பாடு, நகைகள், உடைகள் மட்டுமின்றி, திருமணத்துக்கு முன்னதாக வீட்டின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், புதிய ஃபர்னிச்சர்களை வாங்குதல், போக்குவரத்து செலவுகள், பூ அலங்காரம், திருமணத்துக்கான இசை நிகழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களும் இந்த செலவுக் கணக்கில் சேருகின்றன.

இந்த திருமண பட்ஜெட்டைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி அமைப்பின் தலைவரான பிரிஜேஷ் கோயல், “கொரோனாவுக்கு முன்பு திருமணங்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டன. ஆனா கொரோனா காலகட்டத்தில் அதன் ஆடம்பரங்கள் குறைந்தன. இப்போது மீண்டும் இந்திய திருமணங்கள் ஆடம்பரமாக நடக்கத் தொடங்கியுள்ளன. இதனால் நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முதல் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்கும் பணம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கிறது:’ என்கிறார்.

இதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து திருமணங்களை நடத்தும் வசதியுள்ள பலரும் வெளிநாடுகளில் தங்கள் குடும்ப திருமணங்களை நடத்துகின்றனர். இதனால் இந்த துறையில் இருக்கும் இந்தியர்களின் வருவாய் குறைகிறது அதை மனதில் வைத்துதான் வெளிநாடுகளுக்கு போய் திருமணங்களை நடத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார் பிரதமர்.

இந்தியர்கள் வெளிநாடுகளில் திருமணங்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் கூறிய அதே நேரத்தில் வெளிநாட்டினர் இங்கு வந்து திருமணங்களை நடத்தும் வகையில் இந்தியாவில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுகின்றன. இதன்மூலம் இந்தியாவுக்கு ஏராளமான அந்நியச் செலாவணி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...