‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் இப்போது முடிவடையும் நிலையை எட்டிவிட்டது.
இதுவரை ஷூட் செய்த காட்சிகளைப் பார்த்த கமல் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். பொதுவாக ஷங்கர் தனது படம் முடிவடைதற்கு முன்பு அதன் காட்சிகளை யாருக்கும் போட்டு காட்டுவது வழக்கம் இல்லை. ஆனால் கமல் இம்முறை படத்தைப் பார்த்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற ’இந்தியன் 2’ இப்பொழுது முடிவடைந்து இருக்கிறது. இதற்கு அடுத்த ஷெட்யூலை அமெரிக்காவில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஷூட்டிங்கை வைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இங்கு மட்டும் 10 நாட்கள் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இங்கு கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறார்கள். இதற்காக கமல் உடன் முக்கிய நட்சத்திரங்களும் அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சலஸில் ஷூட் முடிந்துவிட்டால், அடுத்து பேட்ச் வொர்க் மட்டுமே மீதமிருக்கும் என்பதால், ‘இந்தியன் 2’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
கோலிவுட்டில் சூப்பர் பிஸி இவர்தான்!
இன்றைய நிலவரப்படி கோலிவுட்டில் சூப்பர் பிஸி யார் என்று கேட்டால், அது லோகேஷ் கனகராஜ், கமல், ரஜினி, விஜய் என இவர்களில் யாருமில்லை.
அடுத்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என எந்த ஹீரோயின்களும் கூட அவ்வளவு பிஸி இல்லை.
ஆனால் இன்று இரவுப்பகல் என பார்க்காமல், அரைகுறையாக தூக்கி எழுந்து, ட்யூன் போட்டு வரும் அனிருத் ரவிசந்திரன்தான் சூப்பர் பிஸியாக இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத் ரவிசந்திரன். இளைய தலைமுறை நடிகர்களும், இயக்குநர்களும் அனிருத்தை கமிட் செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதனால் இப்பொழுது ஒரே நேரத்தில் 10-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் ’லியோ’, ’ஜெயிலர்’, ‘இந்தியன் 2’, அஜித் மற்றும் சிம்பு படம், ஹிந்தியில் ஷாரூக்கான் – அட்லீ இணையும் ‘ஜவான்’, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘தேவரா’ என அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கும் படங்களின் பட்டியல் நீள்கிறது.