No menu items!

சீமான் Twitter முடக்கம்! யார் காரணம்? என்ன நடந்தது?

சீமான் Twitter முடக்கம்! யார் காரணம்? என்ன நடந்தது?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 20க்கும் மேற்பட்டோர் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எதனால் இந்த நடவடிக்கை, இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.

பொதுவாக என்னென்ன காரணங்களுக்காக ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுகிறது?

சமூக ஊடகங்களிலேயே கருத்து சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ட்விட்டர்தான். இதற்காக இந்திய அரசாங்கத்தோட அவங்க தொடர்ந்து போராடி வந்திருக்காங்க. அரசாங்கம் தான்தோன்றித்தனமா நிறைய கணக்குகளை முடக்கச் சொல்றாங்க என்று உச்ச நீதிமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரா வழக்கு தொடர்ந்திருக்காங்க. எலான் மஸ்க் வந்த பின்னர் இது மாறியது. ‘கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவா இருப்போம்.  ஆனால், அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் நடப்போம்’ என்ற நிலையை அவர் எடுத்தார். இந்தியாவில் ‘தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000’ அடிப்படையில் அரசாங்கம் நினைத்தால் எந்த ட்விட்டர் கணக்கையும் முடக்கலாம் என்னும் நிலைதான் இப்போது உள்ளது. இதனடிப்படையில், ட்விட்டர் கணக்கு முடக்கப்படுவது என்பது இந்தியாவில் நிறைய நடந்துள்ளது. ஆனால், எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது, அதற்கான காரணங்கள் என்பது ட்விட்டரால் தெளிவாக கொடுக்கப்படவில்லை.

சீமான், திருமுருகன் காந்தி ஆகியோர் விவகாரத்தில் எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000க்கின் கீழ் மத்திய அரசு அளித்திருந்த புகாரின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத்தான் டிவிட்டர் அறிவித்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசுக்கு எதிரான குரல்களை எந்த வகையிலாவது முடக்க முயற்சிக்கிறாங்க. சீமான் ட்விட்டர் கணக்கு மீதான நடவடிக்கையை ஒரு முன்னோட்டமாத்தான் நான் பார்க்கிறேன். இதற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் வரவில்லை என்றால், அடுத்து இன்னும் பெரிய எதிர்கட்சி தலைவர்கள் கணக்குகள் முடக்கப்படலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ‘சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குறியது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அறம்; கழுத்தை நெரிப்பது அல்ல’ என கூறியுள்ளார். முதல்வரின் இந்த கண்டனத்தை எப்படி பார்க்கிறீங்க.

இது மிக நல்லது, வரவேற்க வேண்டியது. ட்விட்டர் பதிவுக்காக திமுக அரசும் நிறைய பேர் மேல் நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜக அளவு தீவிரமாக இல்லையென்றாலும் திமுகவும் தங்களை தொந்தரவு செய்யும் கருத்துகளை முடக்கத்தான் முயற்சி செய்திருக்காங்க. இந்நிலையில், முதல்வர் இன்று சொல்லியுள்ளது, திமுகவினர் மத்தியில் எதிர் கருத்துகளை ஜனநாயக ரீதியில் சகித்துக்கொள்ள வழி செய்யும் என்று கருதுகிறேன்.

இன்றைய சமூக ஊடகங்கள் வளர்ச்சியில் இதுபோல் ஒரு கணக்கை முடக்குவதன் மூலம் ஒரு கருத்து பரவலை தடுக்க முடியுமா?

நிச்சயம் முடியாது, இன்னும் தீவிரமாக அந்த கருத்து பரவத்தான் அது வழி செய்யும். உதாரணமாக இன்று சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் என்ற செய்தி மூலம் இந்தியா முழுவதும் யார் இந்த சீமான் என்று தேடப்போகிறார்கள், அவர் கருத்துகள் இன்னும் அதிகமானவர்களிடம் சென்று சேரப்போகிறது. எனவே, இதுபோன்ற தடைகள் வீண் வேலை. பொதுவாக தடையற்ற கருத்து சுதந்திரம்தான் ஒரு நாட்டை சமூக பொருளாதார ரீதியில் முன்னேற்றும். அமெரிக்கா, மேற்கு நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். கருத்து சுதந்திரத்தைப் பொறுத்தவரை இந்தியா அவர்களைத்தான் பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...