நயன்தாராவைப் போலவே சமந்தாவும் இப்பொழுது சர்ச்சைகளுக்கு தீனிப்போடும் தேவதையாக மாறியிருக்கிறார்.
முதலில் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவுடன் காதல், அடுத்து அவருடன் திருமணம்,.
அடுத்து ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நெருக்கமான காட்சியில் நடித்து ஒரு அதிர்வை உண்டாக்கினார்.
சிலவருடங்களிலேயே விவாகரத்து என தனது பரபரப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
இதன் வேகம் தணிவதற்குள் ‘ஊ சொல்றீயா’ பாடலில் உடல்மொழியில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கினார்.
மையோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சினையினால் அவதிப்படுவதாக கூறியவர் சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டார்.
இந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி வந்தவர் இப்பொழுது, அடுத்த சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார்.
ஹிந்திப் படங்களில் நடிக்க விரும்பும் சமந்தா, வெப் சிரீஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டின் ப்ரியங்கா சோப்ரா நடித்துவரும் ‘சிட்டாடல்’ என்னும் வெப் சிரீஸின் இந்திய பதிப்பில் ப்ரியங்கா சோப்ராவுக்குப் பதிலாக சமந்தா நடிக்கிறார்.
இந்த வெப் சிரீஸின் ட்ரெய்லர் வெளிவந்தது. அதில் ஹீரோவுடன் ப்ரியங்கா சோப்ரா அரை நிர்வாணமாக கட்டியணைத்து படுத்திருப்பது போல் ஒரு போஸ்டர் வெளியானது. ப்ரியங்கா சோப்ரா அப்படி கிளாமராக நடித்ததற்கே இங்கே அல்லோகதியானது.
ப்ரியங்கா சோப்ரா தனது ஊடக சந்திப்பில், ‘சிட்டாடல்’ வெப் சிரீஸில் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.
இன்னும் சில நாட்களில் அமேசானில் வெளியாக இருக்கும் இந்த வெப் சிரீஸில் சமந்தாவும் ப்ரியங்கா சோப்ராவைப் போல அரை நிர்வாணமாக நடிக்க இருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது.