இன்றும் ரசிகர்கள் நெஞ்சங்களை படபடக்க வைப்பவர் நடிகை மீனா.
கடந்த ஜூன் மாதம் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய துயரம் நிகழ்ந்தது. அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் காலமானார்.
மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. வித்யாசாகர் சாஃப்ட்வேர் என்ஜினியர். பெங்களூரை சேர்ந்தவர். கொரோனா அலையின் போது மீனாவின் கணவர் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு கொரோனாவிலிருந்து மீண்டாலும் அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் தொடர்ந்தன. இதற்காக பல மாதங்கள் சிகிச்சியில் இருந்தார். மாற்று நுரையீரல்தான் ஒரே தீர்வு என்ற நிலையில் மருத்துவமனையிலேயே வித்யாசாகர் இறந்தார்.
அவரது மறைவு மீனாவுக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி.
எப்போதும் கன்னக்குழி சிரிப்புடன் இருக்கும் மீனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா என்று வருந்தினர்.
மீனா – வித்யாசகர் தம்பதிக்கு நைனிகா என்று ஒரு மகள் இருக்கிறாள். இப்போது 11 வயதாகிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறாள். தெறி படத்தில் விஜய்யுடன் அறிமுகமான நைனிகாவுக்கு இப்போது வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மீனாவும் சினிமாவில் பிசியாகதான் இருக்கிறார். திருஷ்யம், அண்ணாத்தே, ப்ரோ டேடி என்று அவரது படங்கள் சூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருக்கின்றன.
கணவரின் மறைவுக்குப் பிறகு சில மாதங்கள் வெளியில் வராமல் இருந்த மீனா இப்போது வெளியுலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்.
அவர் மறுமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்ற செய்தி இப்போது உலா வருகிறது.
மறுமணம் வேண்டாம் என்று மீனா மறுத்ததாகவும் ஆனால் மகளின் நலனுக்காக மறுமணம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வற்புறுத்தலினால் இப்போது சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உறவிலேயே ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து மீனா இதுவரை எதுவும் சொல்லவில்லை.
மீனாவின் குடும்பதினருக்கும் நெருக்கமானவர்கள் இந்த செய்தியை மறுக்கிறார்கள்.
இது வதந்தியா? உண்மையா?