No menu items!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது. அதன்பின்னரும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளார்.

இனப் பகைவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடலாம்: தொண்டர்களுக்கு மு.. ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு பொல்லாங்குகளையும் பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள். உண்மைகள் நம் பக்கம் இருப்பதால், அந்த பொய்களை பொடிப்பொடியாக தூக்கி எறிய வேண்டும்.

எதிரிகள் நமக்கு எதிராக வெற்று வதந்திகளை கிளப்புவார்கள். அவற்றை நொறுக்கும் விதமாக நம்மிடம் குவிந்துள்ள சாதனை திட்டங்களை முன்வைக்க வேண்டும். தேநீர் கடை, திண்ணை பிரச்சாரம் கட்சிக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும்.

இனப் பகைவர்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள்: உயர் நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல்துறை தரப்பில், “விசாரணையை பெருமளவு முடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப்படும். பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை. இரு பள்ளிகளையும் முழுமையாக திறப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம். மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில், “அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் எம்.எம். ரவி என்பவர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

டேட்டிங் ஆப் மூலம் 20 பெண்களுடன் தொடர்பு: அப்தாப் குறித்து புதிய தகவல்

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரது உடல் 35 துண்டுகளாக பிரிட்ஜில் பாதுகாத்து வைத்து, பல்வேறு பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் அப்தாப் பூனாவாலாவின் சமீபத்திய காதலி, அவரது கொடூரமான செயலைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இந்நிலையில், அப்தாப் வெவ்வேறு டேட்டிங் தளங்கள் மூலம் சுமார் 15 முதல் 20 பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...