இன்று காலையிலிருந்து தமிழ் சினிமாவில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுதான்.
சினேகாவும் பிரசன்னாவும் டைவர்ஸை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று ஆந்திர ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
சினேகாவும் பிரசன்னாவும் சுமுகமாக இல்லை என்பது சில காலமாகவே தமிழ் சினிமாவின் கிசுகிசுவாக இருந்தது.
இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை. கடந்த சில வாரங்களாக இருவரும் தனித் தனி வீடுகளில் வசிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. குழந்தைகளைப் பார்ப்பதற்காக மட்டுமே பிரசன்னா வீட்டுக்கு வந்து போகிறார்….
இப்படி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் தமிழ்த் திரையுலகில் ஓடிக் கொண்டிருந்தன. இப்போது அது செய்தியாக வெளிவந்திருக்கிறது.
இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லை என்பதே பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக சொல்கிறார்கள்.
ஆனால் சினேகா தரப்பில் விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லை, இருவரும் அன்பாக நட்புடன் இருக்கிறோம் என்கிறார்கள்.
“கடந்த மாதம்கூட அவர்கள் வீட்டுக்குப் போனேன். இருவரிடமும் நன்றாக பேசிவிட்டு வந்தேன்” என்று இருவருக்கும் நெருக்கமான இயக்குநர் ஒருவர் கூறுகிறார்.
2002ல் ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ்ப் பட ஹீரோவானார் பிரசன்னா.
2000-ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான சினேகா தமிழில், ‘விரும்புகிறேன்’ படத்தில் கமிட் ஆனார். ஆனால் அந்தப் படம் முதலில் வெளிவரவில்லை. அவர் நடித்த ‘என்னவளே’ திரைப்படம் வெளிவந்தது. அதன்பிறகு அவருக்கு தொடர்ச்சியாக படங்கள்.
மாதவன், விஜய், கமல் என சினேகா வரிசையாக பல முக்கிய படங்களில் நடித்தார்.
2009ல் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் வந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்தார்கள். 2011ல்தான் தாங்கள் காதலில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரசன்னா. 2012-ல் இருவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது சினேகா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிரசன்னாவுக்கும் சில படங்கள் இருந்தன.
ஆனால் குடும்ப வாழ்க்கையை விரும்புவதாக சினேகா தெரிவித்தார். சினேகா – பிரசன்னா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
சினேகா கடைசியாக நடித்த திரைப்படம் 2020-ல் வெளியான ‘பட்டாஸ்’. பிரசன்னா இப்போது ‘துப்பறிவாளன் -2’-ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சரி, டைவர்ஸ் வதந்திகள் குறித்து சினேகா என்ன சொல்கிறார்?
அவர் நேரடியாக எதுவும் சொல்லவில்லை.
ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ’ட்வைனிங், ஹாப்பி வீக்கெண்ட்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபமாய் சில பெரிய இடத்து பிரிவுகள் நடந்திருக்கின்றன.
சமந்தா – நாதசைதன்யா
தனுஷ் – ஐஸ்வர்யா