சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்களும் கூட எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால் இது வரை பொத்திப் பொத்தி வைத்திருந்த அழகை, போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு தனது தேங்க்ஸ் கிஃப்ட்டாக அள்ளி இறைக்க ஆரம்பித்தார்.
கவர்ச்சியில் கிறங்கடித்த கீர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, அவர் நினைத்தபடியே இணையத்தில் ஹாட் டாபிக் ஆனார் கீர்த்தி சுரேஷ்.
இப்போது அந்த கவர்ச்சிகரமான முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. கால்ஷீட் டைரியில் ஒவ்வொரு மாதமும் ஒன்றுமில்லாமல் இருந்தவருக்கு, இப்போது பெரிய வாய்ப்பு தேடி வந்திருக்கிறதாம்.
கேஜிஎஃப்-2 படத்தை தயாரித்த ஹொம்பலி நிறுவனம் தனது அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை கமிட் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்கிறது கீர்த்தி சுரேஷின் வட்டாரம்.
‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கோங்குரா இப்படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறதாம். ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கிற்கு முன்பாக இப்படத்தை முடித்துவிடவும் சுதாவை தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறதாம்.
குழந்தை இப்போது வேண்டாம் – 2-ம் தேனிலவில் நயன் – விக்கி
தேனிலவுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் உலகம் முழுவதும் சுற்றும், வேர்ல்ட் ஹனிமூனுக்குதான் நயன் அண்ட் விக்கி திட்டமிட்டு இருந்தார்கள்.
ஆனால் ஷாரூக் சடக்கென்று ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கை முடிவு செய்துவிட, பாலிவுட்டில் அறிமுகமாவதால் வேறு வழியில்லாமல் தேனிலவை ’அரைகுறையாக’ முடித்துவிட்டு மும்பைக்கு பறந்தார் நயன்தாரா.
இப்பொழுது ‘ஜவான்’ குழுவுக்கு ஒரு சிறிய ப்ரேக் விட்டிருப்பதால், சாட்டர்ட் ஃப்ளைட்டை பிடித்து கொண்டு விக்கியுடன் ஸ்பெயினுக்கு பறந்திருக்கிறார் நயன்தாரா.
ஹனிமூனுக்கு போனாலும், இப்போதைக்கு ‘ப்ளானிங்’கில் நயன் அண்ட் விக்கி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கிசுகிசுக்கிறது. ஜவான் ஷூட்டிங் முடிந்ததும், பிறகு குழந்தை விஷயத்தைப் பார்த்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு கூகுள் கெளரவம்!
பிரம்மாண்டமான படம் என்றால் இந்தியாவில் அது ராஜமெளலிதான் என்பது போல் அடுத்தடுத்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒட்டுமொத்த வசூல் நிலவரப்படி ராஜமெளலியின் பாகுபலி படங்களும், ஆர்.ஆர்.ஆர். படமும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்திருக்கின்றன.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு இப்பொழுதும் ஒடிடி-யில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை ஒடிடி-யில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று உற்சாகத்தில் இருக்கிறார் ராஜமெளலி.
இதற்கெல்லாம் மேலாக, ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு புதிய கெளரவம் ஒன்றை கூகுள் அளித்திருக்கிறது. அதாவது இணையத்தில் பிரபல தேடல் தளமான கூகுள்.காம் தளத்தில் RRR நாம் என்று டைப் செய்தால் முதலில் ஒரு குதிரையில் பாய்ந்து ஓடி வர, அதன் பின்னாலேயே ஒரு பைக்கும் விர்ரூம்ரூம் என்று வேகமெடுத்து வருகிறது.
ஒரு இந்தியப் படத்திற்கு உலகளாவிய தேடல் தளமான கூகுள் அளித்திருக்கும் இந்த கவுரவத்தினால் உச்சி குளிர்ந்து போய் இருக்கிறார் எஸ்.எஸ். ராஜமெளலி
.