No menu items!

வாவ் எதிர்காலம் : ரஜினி ராசி எப்படி இருக்கு?

வாவ் எதிர்காலம் : ரஜினி ராசி எப்படி இருக்கு?

வார ராசி பலன் (மே 2 – மே 8 வரை)

ஜோதிடர் DR. N.ஞானரதம் M.A., PH.D.,

மேஷம் – அண்டை வீட்டார் மூலம் நன்மை உண்டாகும்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதன் மூலம் அபராதத்தினை தவிர்க்கலாம். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 2, 6
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், வெள்ளை


ரிஷபம் – குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்

வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள் 4, 8
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், கிரே


மிதுனம் – குடும்பத்தில் அமைதி நிலவும்

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கவலை வேண்டாம். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட தேதிகள் 2, 5
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், ஊதா


கடகம் – கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும்

புதிய பதவிகள் தேடி வரும். சிறுசிறு விபத்துகளும் வந்துபோகும். கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவினை மட்டும் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள் 4, 7
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: சிவப்பு, வெள்ளை


சிம்மம் – எதிர்பாராத பயணங்கள் உண்டு

தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள்: 3, 6
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: கடல்நீலம், பச்சை


கன்னி – ஆரோக்கியம் மேம்படும்

ஷேர் மூலம் பணம் வரும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.

அதிர்ஷ்ட தேதிகள் 6, 8
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் வெள்ளை, பச்சை


துலாம் – குடும்பத்தில் நல்லது நடக்கும்

அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

அதிர்ஷ்ட தேதிகள் 2, 4
அதிர்ஷ்டம் தடும் நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்ச்


விருச்சிகம் – வியாபாரம் செழிக்கும்

உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பேசும் போது யோசித்து பேசவும். வெளியே செல்லும் முன் வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரம் செழிக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 5, 8
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: ஆரஞ்ச், மஞ்சள்


தனுசு – சகோதரர்களால் அனுகூலம்

வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள் 2, 5
அதிர்ஷ்ட நிறங்கள் வெள்ளை, மஞ்சள்


மகரம் – (நடிகர் ரஜினிகாந்த்தின் ராசி)

கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள் 4, 7
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: கிரே, பச்சை


கும்பம் – புதிய வாய்ப்புகள் வரும்

பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள்.
மாணவர்களுக்கு தேர்வினைப் பற்றிய அச்சம் தீரும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட தேதிகள் 5, 8
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் : நீலம், பச்சை


மீனம் – திடீர் பணவரவு உண்டு

வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தை ஈட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் 3, 6
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் : ஆரஞ்ச், சிவப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...