No menu items!

உற்சாகத்தில் விஷால்!

உற்சாகத்தில் விஷால்!

தமிழ் சினிமாவின் உயரமான நடிகர்களில் ஒருவராகவும், ஆக்‌ஷன் ஹீரோவாகவும் வலம் வந்த விஷாலுக்கு இடையில் அடுத்தடுத்து தோல்விப்படங்கள். இடையில் நிச்சயத்தார்த்த ரத்து. இப்படி பல பிரச்சினைகள்.

இதனால் ரொம்பவே துவண்டுப் போயிருந்தார் விஷால்.

ரஜினி – கமல், அஜித் – விஜய், இந்த இரட்டைப் போட்டியாளர்களுக்குப் பிறகு அடுத்த இரட்டையர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென ஆசைப்பட்ட விஷாலுக்கு அது நிறைவேறாமலேயே போய்விட்டது. அதற்குள் சிவ கார்த்திகேயன் – விஜய் சேதுபதி என இரண்டு புதியவர்கள் முக்கியத்துவம் பெற்று விட்டார்கள். இதனால் தன்னுடைய இடம் எது என்ற குழப்பத்தில் இருந்தாராம் விஷால்.

இந்நிலையில்தான், சமீபத்தில் வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ மட்டுமே விஷாலுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

அடுத்து ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டுமென நினைக்கும் விஷால், இப்போது இயக்குநர் ஹரியுடன் மீண்டும் கைக்கோர்த்திருக்கிறார். ’தாமிரப்பரணி’, ‘பூஜை’ என ஹிட் படங்களை விஷால் – ஹரி கூட்டணிதான் கொடுத்திருந்தது. இதை வைத்தே ஹரியுடன் இணைவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார் விஷால்.

இந்தப் படத்திற்கு ‘ரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக உயரமான நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

ஹரி – விஷால் என்பதால் இப்போது ரத்னம் பட வியாபாரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம். இதில் திரையரங்குகளில் திரையிடும் உரிமைக்கு அப்பாற்பட்டு, இன்டர்நெட்டில் அதாவது ஒடிடி-தளங்களிலும் வெளியிடும் உரிமை பெரிய விலைக்குப் போயிருப்பதாக வியாபார வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அந்தவகையில் ‘ரத்னம்’ படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் பெரிய விலைக்கு வாங்கி இருக்கிறது. விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் மிக அதிக விலைக்குப் போன திரைப்படமாகி இருக்கிறது ‘ரத்னம்’.

தென்னிந்திய மொழி மார்க்கெட்டுக்கு சுமார் 18 கோடி விலைப்போயிருக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ஒடிடி உரிமை அடங்கும். இந்திக்கான உரிமை இன்னும் கொடுக்கப்படவில்லை.

ஒடிடி உரிமையைத் தாண்டி, தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்புவதற்கான உரிமை தனி என்பதால், இதன் மூலமும் வருமானம் இருக்கும். இதனால் விஷால் உற்சாகத்தில் இருக்கிறார்.


கடுப்பில் யோகி பாபு!

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக்கிற்குப் பிறகு யோகி பாபு காட்டில்தான் அடைமழை. இவருக்குப் போட்டியாக கிளம்பிய சதீஷ், ஹீரோவாக நடித்த இரண்டுப்படங்களும் வசூலில் எடுப்படவில்லை. இதனால் சதீஷ் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

இதனால் உற்சாகமான யோகிபாபு, அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும், சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இப்போது பிரச்சினை என்னவென்றால், யோகிபாபு இந்த உயரத்தைத் தொடுவதற்கு முன்பாக நடித்த சின்ன பட்ஜெட், புதுமுகப் படங்கள் பல வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதற்கு நிதி பிரச்சினை ஒரு காரணமாக இருந்தாலும், யோகிபாபுவின் கால்ஷீட் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமாம்.

முன்பு இவர் பட வாய்ப்பு கிடைத்தால் போதுமென்று ஒப்பந்தமான படங்கள் முடிவடைந்துவிட்டாலும், டப்பிங் வேலைகள் நிறைவு பெறாமல் இருக்கின்றன. அதிலும் யோகிபாபு டப்பிங் கொடுக்க வேண்டிய படங்களே அரை டஜன் தேறும் என்கிறார்கள்.

இப்போது யோகிபாபு பிஸியாக இருப்பதாலும், அவரது மார்க்கெட் உயரத்திற்கு சென்று விட்டதாலும், அந்தப்படங்கள் வருவதால் இவருக்கு மைனஸ் என்று நினைக்கிறாராம். இதனால் டப்பிங் கொடுக்க இதுவரை தேதி கொடுக்காமல், அப்போது இப்போது என இழுத்தடிக்கிறாராம்.

இந்த சின்ன படத்தயாரிப்பாளர்கள் யோகிபாபுவின் டப்பிங் வேலை முடியவில்லை என்று அவருக்கு எதிராக புகார் கொடுக்கவும் தயாராகி வருகிறார்களாம். அப்படியொரு சூழல் எழுந்தால், யோகிபாபு கண்டிப்பாக டப்பிங் கொடுக்க, இப்போதுள்ள கால்ஷீட்டை கொஞ்சம் மாற்றிக் கொடுக்க வேண்டியிருக்கும். பணம் சம்பாதிக்கும் நேரத்தில் இப்படி பிரச்சினை பண்ணுகிறார்களே என்று கடுப்பில் இருக்கிறாராம் யோகிபாபு.

ஆனால் அந்த தயாரிப்பாளர்களின் நிலையை நினைத்தால், தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு இன்னும் கடுப்பேறாமல் இருப்பது எதனாலோ என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...