No menu items!

நியூஸ் அப்டேட்: விநாயகர் சதுர்த்திக்கு பலத்த பாதுகாப்பு

நியூஸ் அப்டேட்: விநாயகர் சதுர்த்திக்கு பலத்த பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தடைகள் நீங்கியுள்ளன. இதனால் நகரின் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் எந்த சம்பவம் நடந்தாலும், அந்த போலீஸ் அதிகாரி தான் பொறுப்பு. சந்தை மற்றும் வணிக பகுதிகளில் கூட்ட நெரிசலை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆடியோவில் பேசியது உண்மைதான் – அண்ணாமலை

நான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மையானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த 13-ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதனிடையே, செருப்பு வீசப்பட்டது தொடர்பாக அண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் மகா சுசீந்திரன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என சுசீந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று நிருபர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர், “நான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மைதான். ஆடியோவில் சில வார்த்தைகளை நீக்கியும், சேர்த்தும் தி.மு.க.,வினர் வெளியிட்டுள்ளனர். தலைவர்களிடம் நான் பேசுவதை வெட்டியும், ஒட்டியும் வெளியிடுகின்றனர் என்பதற்காக நான் ஒருவரிடம் பேசுவதை நிறுத்தி கொள்ள முடியாது. அதனை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பேன். திமுகவினர் அந்த ஆடியோவை முழுமையாக வெளியிட வேண்டும்” என்றார்.

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: சென்னை மாநகராட்சி தீர்மானம்

சென்னையில் அண்ணா சாலை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதிய சிலை அமைக்கப்படுகிறது. இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி பஜார் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன . இதற்காக தடையில்லா சான்றிதழ் கோரி சென்னை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் , இன்றைய சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கருணாநிதி முழு உருவச்சிலை நிறுவ தடையில்லா சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தி நடிகையுடன் சுப்மன் கில் காதல்?

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இந்தி நடிகையுடன் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில். அவர் இதுவரை 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுப்மன் கில் இந்தி நடிகை சாரா அலிகானுடன் இரவு உணவு சாப்பிடும் காட்சிகள் இணையதலத்தில் வைரலாகி வருகின்றன. சாரா அலி கான் நடிகர்கள் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள். இவர் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...