No menu items!

பெண்கள் பாதுகாப்பு – சென்னைக்கு என்ன ரேங்க்?

பெண்கள் பாதுகாப்பு – சென்னைக்கு என்ன ரேங்க்?

இந்தியாவின் சுறுசுறுப்பான மெட்ரோ நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (National Crime Records Bureau) தகவல்கள்.

நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் பதிவு செய்து இரண்டு பகுதிகள் கொண்ட புள்ளிவிவர ஆவணமாக வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம். கடந்த 2021-ம் ஆண்டில் மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 என்று இந்த புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாலியல் வன்கொடுமை, கூட்டு பலாத்காரம், ஆசிட் வீச்சு, கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரால் வன்கொடுமை செய்யப்படுதல், கடத்தல், கட்டாய திருமணம், பெண் சிசு மற்றும் சிறுமிகளை விற்றல், கொலை, பிற தாக்குதல்கள், அவமானப்படுத்தும் எண்ணத்தில் பெண்களை துன்புறுத்துதல், வரதட்சணை சம்பந்தப்பட்ட கொடுமைகள், விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது, இணைய வழிகளில் இதர தொந்தரவு செய்தல், போக்சோ, ஆபாச படங்கள் சார்ந்த குற்றங்கள், அநாகரீகமான பெண்களை உருவகப்படுத்துதல் என அனைத்து குற்றங்களும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது ஒவ்வொரு வகையிலும் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின்படி 2021-ம் ஆண்டில் சென்னையில் பெண்களுக்கு எதிராக 874 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. 2020-ம் ஆண்டில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையைவிட இது 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை 13-வது இடத்தில் உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் சென்னையில் 2 சதவீதம் நடப்பது இதில் தெரியவந்துள்ளது.

2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் அரங்கேறிய நகரங்களின் வரிசையில் 13,982 குற்றங்களுடன் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் மொத்த எண்ணிக்கையில் 32.2 சதவிகிதம் ஆகும். அங்கு 2020 ஆம் ஆண்டை விட 40 சதவிகிதம் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களாக மும்பையும் (5,543 குற்றங்கள்) பெங்களூருவும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...