No menu items!

நியூஸ் அப்டேட்: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

நியூஸ் அப்டேட்: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இன்று கோடம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், எழும்பூர், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு, அசோக் நகர், மாம்பலம், செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையோர கடைகளுக்கும் கேஸ் சிலிண்டர்: அமைச்சர் . பெரியசாமி தகவல்

தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு துறை மூலம் அக்டோபர் 6 முதல் 2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பரிசோதனை முறையில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தீபிகா படுகோன் அனுமதி

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த ‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு கடந்த திங்கட்கிழமை இரவு அசவுகரியமாக இருந்ததாகவும் இதய துடிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பங்குச்சந்தை முறைகேடில் கைதான சித்ரா ராமகிருஷ்ணனனுக்கு ஜாமின்

பங்குச்சந்தையில் கோலொக்கேசன் முறைகேட்டில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் உள்ளிட்டோர் மார்ச் மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தொடக்க நிலையில் ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்தது. இருவரும் மீண்டும் முறையீடு செய்ததையடுத்து, இன்று ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுள்ளது.

லதா மங்கேஷ்கர் 93வது பிறந்தநாள்; 40 அடி வீணை சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இன்று அவரது 93வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த வீணை சிலை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். இந்த வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பிரபல பின்னணி பாடகியான பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் பிறந்த தினமான இன்று, அவருக்கு நாட்டுமக்கள் மற்றும் என் சார்பாக மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் எனக்கு நிறைய இனிமையான நினைவுகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் அவரது பாடல்களை கேட்கும் போதும் அவர் குரல் என்னை மயக்கும். அயோத்தியில் ராமர் கோவிலின் பூமி பூஜை முடிந்தவுடன் மகிழ்ச்சியில் என்னை அழைத்தார். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்ட சரஸ்வதியின் பெரிய வீணை இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும். அந்த வீணையில் உள்ள 92 வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தாமரை லதா மங்கேஷ்கரின் 92 வயது வரையிலான வாழ்நாளை சித்தரிக்கிறது. இன்று அயோத்தியில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...