No menu items!

பாப்புலர் ஃபரண்ட் இந்தியா – தடை ஏன்?

பாப்புலர் ஃபரண்ட் இந்தியா – தடை ஏன்?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்திருக்கிறது மத்திய அரசு. இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுகிறது என்பது அடிப்படை குற்றச்சாட்டு. இந்த இயக்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பிரதமரைக் கொல்ல திட்டம் முதல் ஹவாலா முறைகேடுகள், தீவிரவாத செயல்கள் என பல அதி பயங்கர குற்றச்சாட்டுக்களை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) தெரிவித்திருக்கிறது.

கடந்த 22-ம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருக்கிறது என்று செய்திகள் வெளிவந்தன.

இந்த பாப்புலர் ஃபரண்ட் அமைப்பு 2006ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஏழை சாமானிய மக்களுக்காக பணி புரிவது, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இதுதான் பாப்புலர் ஃபரண்ட் அமைப்பின் நோக்கமாக கூறப்படுகிறது.

பொதுவான மக்களின் அமைப்பாக கூறப்பட்டாலும் பாப்புலர் ஃபரண்ட் இஸ்லாமிய அமைப்பாகதான் பார்க்கப்படுகிறது. கேரளாவிலும் கர்நாடாகாவிலு பாப்புல ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அதிகமாக பரவி இருக்கிறது. தமிழ் நாட்டிலும் சில இடங்களில் இந்த அமைப்பு உள்ளது. இந்தியாவில் 20 மாநிலங்களில் இதன் கிளைகள் உள்ளன.

சுதந்திரத்தையும் நீதியையும் பாதுகாப்பையும் கொடுக்கும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே எங்கள் அமைப்பின் நோக்கம் (“egalitarian society where everyone enjoys freedom, justice and a sense of security”) என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நோக்கம் நல்லெண்ணமாக தெரிந்தாலும் இதன் உறுப்பினர்களின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன. 2010ல் கேரளாவில் ஒரு பேராசிரியரின் கையை வெட்டியது, ராஜாஸ்தானில் ஒருவரைக் கொன்றது என இந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் அதிகம் உண்டு. அந்த சம்பவங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று இந்த அமைப்பு மறுத்தாலும் அரசு புலனாய்வு நிறுவனங்கள் இந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளன.

பாப்புலர் ஃபரண்ட் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது தடை செய்யப்பட்ட சிமி அமைப்பினருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது. SIMI – Students’ Islamic Movement of India எனப்படும் சிமி அமைப்பு தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது என்று தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் பாப்புலர் ஃபரண்ட் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...