No menu items!

நியூஸ் அப்டேட்: தஞ்சாவூரில் விமான நிலையம்

நியூஸ் அப்டேட்: தஞ்சாவூரில் விமான நிலையம்

திமுகவின் புதிய உறுப்பினரான எஸ்.கல்யாணசுந்தரம், நேற்று மாநிலங்களவையில் பேசும்போது, “தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இல்லை எனில் அதன் காரணம் தருக. இதுவரையும் அதற்காக எதுவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில், “தஞ்சாவூரில் இந்திய விமானப்படையின் விமானநிலையம் ஏற்கெனவே அமைந்துள்ளது. இதில், இந்திய விமானநிலைய அதிகார நிறுவனத்திற்கு 26.5 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளது. எனினும், இந்த நிலம் பொது விமானநிலையம் அமைக்க போதுமானதாக இல்லை. எனவே, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானநிலைய அதிகார நிறுவனம் ஆகிய இரண்டும் தம் நிலங்களை பறிமாறி புதிய என்க்ளேவ் அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மேலும், மத்திய விமானப்போக்குவரத்து துறையின் சார்பில் பிராந்தியங்களை இணைக்கும் திட்டம் (ஆர்சிஎஸ்) ‘உடான்’ எனும் பெயரில் 2016 முதல் செயல்படுகிறது. இதில், பிராந்தியப் பிரதேசங்களை குறைந்த கட்டண விமானசேவை மூலம் இணைக்கப்படுகிறது. இந்த ஆர்சிஎஸ் மூலம் தஞ்சாவூரின் விமானநிலையம் அமைக்க இரண்டாம் கட்ட ஏலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், விமானநிலையம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொழில் புரிய உகந்த மாநிலங்கள் – 3ஆவது இடத்தில் தமிழ்நாடு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், “தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தொழில்துறை சார்பில் ஆறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே எனது முழுமுதல் விருப்பம் ஆகும்.

படித்த அனைவர்க்கும் வேலைகள் – அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலைகள் – நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் – என்ற சூழலை தமிழ்நாட்டில் உருவாக்குவோம். புத்தொழில் நாடாக – புத்தொளி நாடாகவும் தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என கூறினார்.

ரயில் நிலையங்களில் ‘பயணியர் உதவி மையம்’ பெயர் ‘சஹ்யோக்’ என மாற்றம்: சு. வெங்கேடசன் கண்டனம்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை ‘சஹ்யோக்’ என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய ரயில்வே அமைச்சர் தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சாடியுள்ளது.

அல் காய்தா தலைவர் ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது எப்படி?

அல்-காய்தா தலைவர் பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தா தலைவராக இருந்து அதன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து வந்தவர் அல் ஜவாஹிரி. ஆப்கானிஸ்தானில் பகிங்கியிருந்த இவரை கடந்த 30ஆம் தேதி ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றுள்ளது.

ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது எப்படி என்பது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ராய்ட்டர்ஸ், “இந்த ஆண்டு, ஜவாஹிரியின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அதே இடத்தில் ஜவாஹிரியை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆள், அல் ஜவாஹிரிதான் என்பதை படிப்படியாக உறுதி செய்வதற்காக பல்வேறு உத்திகளை அமெரிக்க உளவு அதிகாரிகள் மேற்கொண்டனர். இறுதியில் அவர்தான் அந்த ஆள் என்பதை கடந்த ஏப்ரல் மாதத்தில் உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் அதிபர் ஜோ பைடனிடம் விளக்கியுள்ளார். இதன் பிறகு ஜவாஹிரியைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

ஜவாஹிரி இருந்த வீட்டின் கட்டுமானம் மற்றும் தன்மையை ஆராய்ந்து, அதில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, கட்டடத்தின் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல், பொதுமக்கள் மற்றும் ஜவாஹிரியின் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஜவாஹிரியை கொல்ல முடியும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

வீட்டின் பால்கனிக்கு வருவதை ஜவாஹிரி வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதனை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. உள்ளூர் நேரப்பட்டி ஜூலை 30-ஆம் தேதி காலை 9.48 மணிக்கு ட்ரோனில் இருந்து ஏவப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை மூலம் ஜவாஹிரி கொல்லப்பட்டார். ஹெல்பயர் ஏவுகணை ‘வெடிக்காத’ வகையைச் சேர்ந்தது. அதனால் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தவிர கட்டடத்தின் வேறு பகுதி எதுவும் சேதமடையவில்லை” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...