No menu items!

லியோவில் கமல்?

லியோவில் கமல்?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘லியோ’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்பு.

ஆளாளுக்கு ஒவ்வொரு அப்டேட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டப்படியே இருக்கிறார்கள். இதனால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது என்று தயாரிப்பு நிறுவனமும் இதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒரு அதிரிப்புதிரி கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அது லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் இருக்கிறது. ‘விக்ரம்’, ‘கைதி’ படங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

‘விக்ரம்’ படத்தில் கமல் அணிந்திருந்த அதே உடையில் தோன்றும் கமல், சில காட்சிகளுக்கான வாய்ஸ் ஓவர் பணிக்காக தனது குரலில் பேசியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

கமல் விஜயுடன் திரையில் தோன்றும் வகையில் சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். கமல் சமீபத்தில் துப்பாக்கி சுடுவது போன்று எடுக்கப்பட்ட வீடியோ லியோ சம்பந்தப்பட்டது என்றும் ஒரு தகவல் இப்போது அடிப்படுகிறது.

‘விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜூவுக்காக கமல் லியோவில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதைதான் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என பேச்சு இப்போது ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...