No menu items!

சித்தார்த் அதிதி ராவ் திருமணமா?

சித்தார்த் அதிதி ராவ் திருமணமா?

சித்தார்த், அதிதி ராவ் இவர்கள் இருவருக்குமிடையே ஏறக்குறைய மூன்று வருட தொடர்ந்த காதலன் – காதலி உறவு முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.

இவர்கள் இருவரும் ‘மஹா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்தார்கள். இந்தப்படம் 2021-ல் வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இவர்கள் இருவருக்குமிடையில் ஒரு புரிதல் உருவாகிவிட்டது. அதன்பிறகு காதல் வைரஸை போல் தாக்க, இவர்கள் இருவரும் அதை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியாமல், லிவ் – இன் உறவுக்கு மாறிவிட்டதாக ஒரு கிசுகிசு இன்னும் இருந்து வருகிறது.

இவர்கள் இருவரையும் ஜோடியாக பல இடங்களில் பலர் பார்த்தாலும், இவர்கள் இருவரும் தங்களுக்கு காதல் இருக்கிறதா இல்லையா என்று இதுவரை வாயைத் திறக்கவில்லை. இந்நிலையில்தான், இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலங்கானாவில் இருக்கும் வனபர்தி மாவட்டத்தில் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீரங்கநாயகசுவாமி கோயில் சந்நிதானத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள். இந்த கோயிலில் வைத்து திருமணம் நடக்க காரணம், அதிதி ராவ் தாத்தா இந்த கோயிலின் முக்கிய தலைமை தர்மகர்த்தா.

மேலும் சித்தார்த்த் குடும்பத்தின் வேண்டுகோளின் படி, திருமண சடங்குகளை தமிழ்நாட்டில் இருந்து வரழைக்கப்பட்ட புரோகிதர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

சித்தார்த், அதிதி ராவ் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். இதனால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்தான். சித்தார்த் தனது காதலி மேக்னாவை 2003-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு, திருமண உறவு எழவே விவாகரத்து வரை போய்விட்டது. இதற்குப்பின் சித்தார்த் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது.

இவர்களது கல்யாணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. சித்தார்த்தும், அதிதியும் இப்பொழுதாவது சொன்னால்தான் நீண்ட நாள் கிசுகிசுவுக்கு ஒரு முடிவு வரும்.


பதட்டத்தில் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் எந்தளவிற்கு பரபரப்பின் உச்சத்தில் இருந்தாரோ, அதே அளவுக்கு பதட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஒரே காரணம் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் படம்தான்.

லோகேஷ் கனகராஜின் படங்களில் இரண்டாவது பாதி பெரும்பாலும் திரைக்கதையில் வலுவில்லாமலேயே இருக்கிறது என்ற கமெண்ட்தான் லோகேஷ் கனகராஜை இப்படி பதட்டப்பட வைத்திருக்கிறது,

ரஜினியைப் பொறுத்தவரை, முதலில் கதை கேட்பார். அந்த கதை பிடித்திருந்தால், பின்பு அதை திரைக்கதையாக விறுவிறுப்பாக இருக்கும்படி எழுத சொல்வார். அந்த வேலை முடிந்தால் மீண்டும் கதையை கேட்பார். தேவைப்பட்டால் சில திருத்தங்களைச் சொல்வார். கதை விஷயம் பக்காவாக இருந்தால், திரும்ப தொல்லை கொடுக்கமாட்டார்.

ஜெயிலரை பொறுத்தவரையில், கதை திரைக்கதை விவாதத்தில் சீனியர் இயக்குநரையும் கூடவே வைத்திருக்கும்படி ரஜினி கூறிவிட்டார். இதெல்லாம் சேர்ந்துதான் லோகேஷை படபடக்க வைத்திருக்கிறதாம்.

வழக்கம்போல் தனது குழுவோடு, ஏதாவது மலைப் பிரதேசத்திற்குப் போய், சமைத்து சாப்பிட்டு கதை யோசிப்பதை இந்த முறை லோகேஷ் தவிர்த்துவிட்டாராம். விளையாட்டுத்தனமாக இருந்தால், கவனம் சிதறிவிடும் என்பதால், அடிக்கடி டிஸ்கஷன் டூரை கைவிட்டுவிட்டாராம்,

இப்போது ரஜினி லோகேஷ் கனகராஜூவுக்கு ஜூன் மாதம் வரை அவகாசம் கொடுத்திருக்கிறாராம். அதற்குள் திரைக்கதையை முடித்துவிட்டு, ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் லோகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...