No menu items!

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – பிரதமர் மோடி வழங்குகிறார்

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – பிரதமர் மோடி வழங்குகிறார்

திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளப்பட்டி காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, முதலமைச்ச ஸ்டாலின், ஆளுநர் ஆர்என்.ரவி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதனால், நாளை நடைபெறும் விழாவில் 2018 – 2019, 2019 – 2020 ஆம் ஆண்டு இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்த 2,314 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில், அதிக மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்ற 4 பேருக்கு பிரதமர் மோடி பட்டம் மற்றும் பதங்களை வழங்க உள்ளார். இதையடுத்து இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகிய இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கனமழை வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நேற்று வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று  தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (10-11-2022) முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்: பிராமண சமாஜம் வேண்டுகோள்

தமிழ்நாடு பிராமண சமாஜம் நிறுவன மாநிலத் தலைவர் நா.ஹரிஹரமுத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொது பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தமிழ்நாட்டில் பிராமணர் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள் உட்பட 78 சமூகங்களைச் சேர்ந்தோர் பயனடைவர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை விட்டுவிட்டு முழுமையான சமூக நீதியை நிலை நாட்ட இயலாது. இந்த இட ஒதுக்கீடு முழுமையான சமூக நீதியை நிலை நாட்டுகிறது. எனவே, 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு  அரசு அமல்படுத்தி முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் உடல் கருகி பலி

மதுரை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள அழகு சிறை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்; 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

11,000+ ஊழியர்கள் பணிநீக்கம் – ‘வருத்தம்தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனர்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta Platforms Inc) தமது பணியாளர்களில் 11,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணைய பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்த போட்டி மற்றும் விளம்பரங்கள் மூலமான வருவாய் இழப்பு ஆகியவை எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயையே அளித்தன. பணி நீக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய கஷ்டத்தை அளிக்கும் என்பதை அறிவேன். பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கோருகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டதோ அதற்கும், பணி நீக்கத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஸ்நாப்சேட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் 20 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ட்விட்டர் நிறுவனம் கடந்த வாரம் 50 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...