No menu items!

தேர்தல் கமிஷனின் 2ஆவது கடிதத்தையும் திருப்பி அனுப்பியது இபிஎஸ் அணி

தேர்தல் கமிஷனின் 2ஆவது கடிதத்தையும் திருப்பி அனுப்பியது இபிஎஸ் அணி

அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அதிமுக தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பினர். இதன் பிறகு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அதிமுக தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக முன்பு பதவி வகித்த காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டையையும் அதில் முன் வைத்துள்ளார்.

மேலும், “என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைக்கு பாஜகவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மையான பாஜக தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த இந்த முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம்,” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: கிராம் ரூ. 5200 நெருங்கியது

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ. 41,200ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.328 உயர்ந்து ரூ.41,528க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.41 அதிகரித்து ரூ.5,191க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள்.

இதே போன்று வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.75,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு மனு விசாரணை ஒரு மாதத்திற்கு தள்ளிவைப்பு

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நீட் தேர்வை சட்டமாக்கிய சட்ட திருத்தத்துக்கு தடை கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த மனு மீதான விசாரணையை ஒரு மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...