No menu items!

அப்செட்டில் நயன்தாரா!

அப்செட்டில் நயன்தாரா!

கதை சொல்ல போய், காதலை வளர்த்தவர் விக்னேஷ் சிவன்.

தன்னுடைய கதையையும், பாடலையும் நயன்தாராவுக்கு சொல்ல போன விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட்டை விட பெரிய பரிசாக கிடைத்தது நயன்தாராவின் காதல். இந்த காதல் கடைசியில் கல்யாணத்தில் முடிந்தது.

இரண்டாம் கட்ட நடிகர்களை வைத்தே இயக்கிக் கொண்டிருந்த தனது கணவருக்கு விஜய் அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென ஆசைப்பட்ட நயன்தாரா தாமாகவே முன்வந்து சிபாரிசு செய்தார்.

அப்படி அமைந்ததுதான் லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்க இருந்த படம்.

லைக்கா சுபாஸ்கரனிடம் நயன்தாரா நேரடியாகவே பேசிதான் இந்த வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வந்தது.. நயன்தாரா சொன்னதால் அஜித்தும் இயக்குநர் விஷயத்தில் பெரிதாக சாய்ஸ் எதுவும் கேட்கவில்லை.

முதலில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை ஒன்று. அது ஒரு காதல் கதை. ஆனால் ’துணிவு’ படத்தின் வெற்றி, மீண்டும் ஆக்‌ஷன் படம் பண்ணவேண்டிய கட்டாயத்திற்குள் அஜித்தை தள்ளிவிட்டது.

வேறு வழியில்லாமல் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் க்ளைமாக்ஸ்தான் ஹைலைட். அதை பரபரவென எடுக்க முடியாது. ஷூட் செய்வதற்கே நாட்கள் அதிகம் பிடிக்குமாம்.

இதைப்புரிந்து கொண்ட லைக்கா, விக்னேஷ் சிவன் ப்ராஜெக்ட்டை அப்படியே தள்ளி வைத்துவிட்டது.

இதனால் நயன்தாரா ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். தான் சிபாரிசு செய்தும் படம் தள்ளிப் போய்விட்டதே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நயன்தாரா வருத்தப்பட்டிருக்கிறாராம்.

க்ளைமாக்ஸை சீக்கிரம் முடித்து, அஜித்துடன் கமிட்டாகும் வழியைப் பாருங்கள் என்று விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா அன்புக்கட்டளைப் போட்டிருக்கிறாராம்.


அதிர வைக்கும் சிம்புவின் சம்பளம்

சமீபகாலமாக வெளி வந்த எந்தப் படங்களும் சிம்புவுக்கு கைக்கொடுக்கவில்லை. கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்த ‘வெந்து தணிந்தது காடு’ மட்டுமே கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது.

இதனால் ’பத்து தல’ படத்தைப் பெரிதாக நம்பி கொண்டிருக்கிறார் சிம்பு.

படங்கள் கையில் இல்லை என்பது ஒரு பக்கம். ஆனால் தேடிவரும் வாய்ப்புகளையும் சிம்பு இழந்து கொண்டிருக்கிறாராம்.

ஒரே காரணம் சம்பளம்.

சிம்புவுக்கு யாராவது கதை சொல்ல போனால், முதலில் கதையைக் கேட்பது சிம்புவின் அம்மா உஷா. அவருக்குப் பிடித்தால் மட்டுமே, அடுத்தக்கட்டமாக சம்பள விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.
’என் மகன் நடிச்சா அது வேற லெவல் படம். அதனால 40 கோடி சம்பளம் வேணும்’ என்று கதை சொல்லப் போகிறவர்களை அதிர வைக்கிறாராம்

‘என்னது 40 கோடியா.’ என்று அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இதனால் தேடி வரும் வாய்ப்புகளையெல்லாம் இழந்து கொண்டு இருக்கிறார் சிம்பு என்கிறார்கள்.


டென்ஷனான விஜயின் அப்பா!

’நான் கடவுள் இல்லை’ பட த்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அதில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார்.

அந்த சந்திப்பில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. அதில் ஸ்டார் லோகோவும், அதற்கு பக்கத்திலேயே விஜயின் படம் இடம்பெற்று இருந்தது.

இதைப்பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களில் ஒருவர், ஸ்டார் இருக்கிறது. பக்கத்திலேயே உங்கள் மகன் விஜயின் படமு இருக்கிறது. அப்படியானால் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று குறியீடு மூலம் சொல்ல வருகிறீர்களா என்ற ரீதியில் கேள்வி கேட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத எஸ்.ஏ. சந்திரசேகர், பிறகு சுதாரித்து கொண்டு, ’’இந்த வீடியோவில் விஜய் மட்டுமே இல்லை. நான் அறிமுகப்படுத்திய அனைத்து ஹீரோக்களின் படங்களும் இருக்கின்றன. நான் கடைசியாக அறிமுகப்படுத்திய ஹீரோ விஜய் என்பதால் அவரது படத்தையும் வைத்திருக்கிறேன். வேறெந்த காரணமும் இல்லை’’ என்றார்.

மீண்டும் மீண்டும் அது தொடர்பான கேள்விகள் எழவே, ‘நான் கடவுள் இல்லை’ படம் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்று எஸ்.ஏ. சந்திரசேகர் டென்ஷனாகிவிடவே, கூட இருந்தவர்கள் நிலைமையை சமாளித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...