No menu items!

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவு தமிழ்நாட்டில்தான்!

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவு தமிழ்நாட்டில்தான்!

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு கடந்த 10-09-2022 (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. இதற்கு அதிமுக, பாமக, பாஜக மட்டுமல்லாமல் சிபிஎம், சிபிஐ போன்ற திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மின் கட்டண உயர்வு குறித்து விளக்கம் அளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவுதான்” என்று தெரிவித்தார். மேலும், கர்நாடகாவில் 100 யூனிட் வரைக்கும் ரூ.4.30, குஜராத்தில் ரூ.5.25 மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

சரி, அமைச்சர் சொல்வது சரியா, ஒவ்வொரு மாநிலத்திலும் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு உள்ளது என தகவல்களை சேகரித்தோம். ஆச்சரியம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிடும்போது, சமீப உயர்வுக்கு பின்னரும் குறைவான மின் கட்டணம் இருப்பது தமிழ்நாட்டில்தான். தற்போது அதிகபட்சமாக ராஜஸ்தானில் 100 யூனிட்டுக்கு 935 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசம். ராஜஸ்தானில் 200 யூனிட்டுக்கு 1585 ரூ. வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ. 225 தான்.

இனி ஒவ்வொரு மாநிலத்திலும் மின் கட்டணம் எவ்வளவு உள்ளது எனப் பார்ப்போம்…

ராஜஸ்தான்

100 யூனிட் – 935 ரூபாய்
200 யூனிட் – 1585
300 யூனிட் – 2235
400 யூனிட் – 3060
500 யூனிட் – 3795
600 யூனிட் – 4530

ஹரியானா

100 யூனிட் – 935
200 யூனிட் – 910
300 யூனிட் – 1475
400 யூனிட் – 2000
500 யூனிட் – 2675
600 யூனிட் – 3455

மகாராஷ்டிரா

100 யூனிட் – 710
200 யூனிட் – 1210
300 யூனிட் – 2616
400 யூனிட் – 3532
500 யூனிட் – 4448
600 யூனிட் – 5364

பீகார்

100 யூனிட் – 650
200 யூனிட் – 1330
300 யூனிட் – 2040
400 யூனிட் – 2710
500 யூனிட் – 3420
600 யூனிட் – 4130

அசாம்

100 யூனிட் – 650
200 யூனிட் – 1300
300 யூனிட் – 2028
400 யூனிட் – 2688
500 யூனிட் – 3488
600 யூனிட் – 4368

மணிப்பூர்

100 யூனிட் – 640
200 யூனிட் – 1280
300 யூனிட் – 2005
400 யூனிட் – 2600
500 யூனிட் – 3405
600 யூனிட் – 4210

ஜார்கண்ட்

100 யூனிட் – 625
200 யூனிட் – 1250
300 யூனிட் – 1875
400 யூனிட் – 2500
500 யூனிட் – 3125
600 யூனிட் – 3750

மேற்கு வங்காளம்

100 யூனிட் – 598
200 யூனிட் – 1307
300 யூனிட் – 2083
400 யூனிட் – 2829
500 யூனிட் – 3614
600 யூனிட் – 4399

கர்நாடகா

100 யூனிட் – 592
200 யூனிட் – 1279
300 யூனிட் – 2241
400 யூனிட் – 2943
500 யூனிட் – 3930
600 யூனிட் – 4917

மிசோரம்

100 யூனிட் – 590
200 யூனிட் – 1180
300 யூனிட் – 1990
400 யூனிட் – 2700
500 யூனிட் – 3620
600 யூனிட் – 4540

மத்திய பிரதேசம்

100 யூனிட் – 538
200 யூனிட் – 1148
300 யூனிட் – 1672
400 யூனிட் – 3978
500 யூனிட் – 4640
600 யூனிட் – 5762

மேகாலயா

100 யூனிட் – 530
200 யூனிட் – 1060
300 யூனிட் – 1630
400 யூனிட் – 2080
500 யூனிட் – 2810
600 யூனிட் – 3540

குஜராத்

100 யூனிட் – 515
200 யூனிட் – 1045
300 யூனிட் – 1595
400 யூனிட் – 2190
500 யூனிட் – 2785
600 யூனிட் – 3535

உத்தரப்பிரதேசம்

100 யூனிட் – 515
200 யூனிட் – 1030
300 யூனிட் – 1595
400 யூனிட் – 2095
500 யூனிட் – 2775
600 யூனிட் – 3455

நாகலாந்து

100 யூனிட் – 545
200 யூனிட் – 1200
300 யூனிட் – 2100
400 யூனிட் – 2800
500 யூனிட் – 3500
600 யூனிட் – 4200

திரிபுரா

100 யூனிட் – 467
200 யூனிட் – 1043
300 யூனிட் – 1589
400 யூனிட் – 2225
500 யூனிட் – 2841
600 யூனிட் – 3457

உத்தரகாண்ட்

100 யூனிட் – 410
200 யூனிட் – 860
300 யூனிட் – 1420
400 யூனிட் – 1840
500 யூனிட் – 2560
600 யூனிட் – 3380

ஒடிசா

100 யூனிட் – 480
200 யூனிட் – 960
300 யூனிட் – 1740
400 யூனிட் – 2320
500 யூனிட் – 3100
600 யூனிட் – 3720

ஹிமாச்சல பிரதேசம்

100 யூனிட் – 415
200 யூனிட் – 1010
300 யூனிட் – 1515
400 யூனிட் – 2260
500 யூனிட் – 2825
600 யூனிட் – 3390

அருணாசலபிரதேசம்

100 யூனிட் – 400
200 யூனிட் – 800
300 யூனிட் – 1200
400 யூனிட் – 1600
500 யூனிட் – 2000
600 யூனிட் – 2400

கேரளா

100 யூனிட் – 385
200 யூனிட் – 775
300 யூனிட் – 1365
400 யூனிட் – 1365
500 யூனிட் – 2765
600 யூனிட் – 3700

பஞ்சாப்

100 யூனிட் – 374
200 யூனிட் – 1168
300 யூனிட் – 1752
400 யூனிட் – 2920
500 யூனிட் – 3650
600 யூனிட் – 4380

சத்தீஷ்கர்

100 யூனிட் – 370
200 யூனிட் – 780
300 யூனிட் – 1590
400 யூனிட் – 2120
500 யூனிட் – 3150
600 யூனிட் – 3780

டில்லி

100 யூனிட் – 300
200 யூனிட் – 600
300 யூனிட் – 1350
400 யூனிட் – 1800
500 யூனிட் – 3250
600 யூனிட் – 3900

ஆந்திரா

100 யூனிட் – 254
200 யூனிட் – 649
300 யூனிட் – 1194
400 யூனிட் – 1794
500 யூனிட் – 2572
600 யூனிட் – 3447

சண்டிகர்

100 யூனிட் – 250
200 யூனிட் – 850
300 யூனிட் – 1275
400 யூனிட் – 1700
500 யூனிட் – 2325
600 யூனிட் – 2790

தெலுங்கானா

100 யூனிட் – 215
200 யூனிட் – 545
300 யூனிட் – 1220
400 யூனிட் – 1700
500 யூனிட் – 2890
600 யூனிட் – 3680

சிக்கிம்

100 யூனிட் – 200
200 யூனிட் – 600
300 யூனிட் – 1050
400 யூனிட் – 1400
500 யூனிட் – 2000
600 யூனிட் – 2400

புதுச்சேரி

100 யூனிட் – 190
200 யூனிட் – 580
300 யூனிட் – 1500
400 யூனிட் – 2580
500 யூனிட் – 3225
600 யூனிட் – 3870

கோவா

100 யூனிட் – 160
200 யூனிட் – 470
300 யூனிட் – 885
400 யூனிட் – 1560
500 யூனிட் – 2250
600 யூனிட் – 2700

தமிழ்நாடு

100 யூனிட் – 0
200 யூனிட் – 225
300 யூனிட் – 675
400 யூனிட் – 1794
500 யூனிட் – 1125
600 யூனிட் – 2750

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைவான மின் கட்டணம் இருந்தாலும், ‘பல ஆண்டுகளாக ஏற்றாமல் மொத்தமாக திடீரென ஏற்றுவதால் சிறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, இதற்கு பதிலாக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வரலாம்’ என்பதே தொழில் துறையினர் குரலாக உள்ளது. இதுபோல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடுவதற்கு பதிலாக மாதம்தோறும் கணக்கிட வேண்டும் என்பதும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...