No menu items!

சமந்தா To  ஜான்வி நடிகைகளின் செண்டிமெண்ட்!

சமந்தா To  ஜான்வி நடிகைகளின் செண்டிமெண்ட்!

சினிமா என்றாலே செண்டிமெண்ட் நிறைந்த ஒரு இடமாகத்தான் இருந்து வருகிறது. இதில்  கோடிக்கணக்கான பணம்  முதலீடு செய்வதால்  வெற்றி  என்பதை அடைந்தே ஆகவேண்டிய சூழல் இருப்பதால் எல்லோரும்  செண்டிமெண்ட் ஜோசியம், ஜாதகம்,. ஆன்மீகம் என்று நட்சத்திரங்கள்  மூழ்கிப்போய் விடுகிறார்கள்.  

சமீபத்தில்  ஜான்வி கபூர் தனக்கு இருக்கும் செண்டிமெண்ட் பற்றி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஸ்ரீதேவி பிரிவுக்குப் பிறகு அப்பாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வரும் ஜான்வி, குஷி இருவரும் தங்களுக்கான கதைகளை மட்டும் தங்கள் இஷ்டப்படி தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்,  திரைப்படங்களை விட உடற்பயிற்சி கூடங்களில் தென்படுவதுதான் ஜான்விகபூரின் வழக்கமாக இருக்கிறது. இவரை பின் தொடர்ந்து  செல்லும் போட்டோகிராபர்கள் எடுக்கும்  போட்டோக்கள்  இணையத்தில்  அடிக்கடி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தும்.

சமீபத்தில் அவர் தனது ராசி குறித்தும் அதன் பலன் குறித்தும் பேசி அதன் படிதான் தினமும் நான் நடந்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.  இதைப் பிடித்துக் கொண்ட இணையவாசிகள்  ஜான்விக்கு செண்டிமெண்ட் அதிகம் அதனால் அவர் தினமும் ராசி பார்த்துத்தான் எல்லோரிடமும் பேசுவார். யாருக்காவது சந்ராஷ்டமம் இருப்பது தெரிந்தால் அவர்களை சந்திப்பதையே தவிர்த்து விடுவார் என்றெல்லாம்   பரப்பி வருகிறார்கள். இதனால்  ஜான்வி கடும் கோபத்தில் இருக்கிறார்,

தனது புதிய திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸ் மஹி என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அங்கு பேசிய ஜான்வி நாம் எல்லோருமே நம்முடைய ராசி பார்த்துதான் காரியங்களை செய்கிறோம் நானும் அப்படித்தான். ஆனால் ராசி பார்த்துதான் ஒரு மனிதரிடம் பேசுவேன் என்று சொல்வதெல்லாம் தவறு  என்று கோபத்தைக் காட்டியிருக்கிறார்.

மும்பை சினிமாவை பொருத்தவரைக்கும் ஜான்வி கபூர் மட்டுமல்ல எல்லா நடிகைகளும் பக்தியில் மூழ்கிப் போயிருக்கிறார்கள்.  கங்கனா ரணவத்  அடிக்கடி பூரி ஜெகந்நாத் கோவிலுக்கு சென்று வருவார்.  சமந்தா தமிழ் கேரளாவில் இருக்கும் பதமநாப சாமி கோவிலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  போய் வருகிறார்.  அவ்வளவு ஏன்  பாலிவுட் ஹீரோ  சஞ்சய் தத்  தனக்கான ஜாதகம் பார்க்க கேரளாவிலும்  தமிழ் நாட்டிலும்  குறிப்பிட்ட  ஒரு ஜோதிடர் ஒருவரை சந்திக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.  சில மாதங்களுக்கு முன்பு  சென்னை வடபழநி  பகுதியில் இருக்கும்  ஜோதிடரை  சந்தித்துச் சென்றிருக்கிறார். 

தமிழ் சினிமாவிலும்  செண்டிமெண்டுக்கு குறைவில்லை என்பதை மறுக்க முடியாது எவ்வளவு பெரிய நாயகன் நடித்தாலும் அதற்கு பூஜை என்று சிறிய அளவில் நடத்திய பிறகுதான்  படப்பிடிப்பையே நடத்துவார்கள். ஏன் ரஜினிகாந்த் நடிக்கும்  எல்லா படங்களின் முதல் காட்சியை ஏவி.எம்.ஸ்டுடியோவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் முதல் காட்சியை எடுக்கும் வழக்கம் பல காலங்களாக தொடர்ந்து நடந்து வந்தது. சில் வருடங்களுக்கு முன் ஏவி.எம். ஸ்டுடியோ மாற்றி அமைக்கப்பட்ட பிறகுதான் இந்த வழக்கம்   இல்லாமல் போனது. இப்படி செண்டிமெண்ட்  சினிமா இரண்டையும் பிரிக்க முடியாத ஒரு சக்தியாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...