No menu items!

நியூஸ் அப்டேட்: ரஹ்மானுக்கு பாஜக அண்ணாமலை ஆதரவு!

நியூஸ் அப்டேட்: ரஹ்மானுக்கு பாஜக அண்ணாமலை ஆதரவு!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தி மொழி திணிப்பைத் தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது. தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று. இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டுமானால் தமிழ் பள்ளிகளைத் திறக்க மாநில முதல்வர்களுக்கு அரசு கடிதம் எழுத வேண்டும்” என்று கூறினார்.

ஆலியா பட்ரன்பீர் கபூர் திருமணம் ஒத்திவைப்பு!

நாளை மறுநாள் (ஏப்ரல் 14) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலியாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ராகுல் பட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் இன்று அளித்த பேட்டியில், “ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் நடக்கும். ஆனால், ஏப்., 13, 14-ல் இல்லை. மீடியாக்களுக்கு தகவல் கசிந்த பின், அதிக அழுத்தம் உள்ளதால், திருமணம் நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: வானதி சீனிவாசனுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் பிரச்சினை குறித்து தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் இன்று கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது. எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை. இருந்தாலும், பாஜகவைச் சார்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்துங்கள். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

சென்னைசேலம் 8 வழிச்சாலை: திமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. வேலு பேச்சு

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்தார். அப்போது, சென்னை – சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, “சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்து கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பிரபல ரவுடிக்கு தூக்கு தண்டனை: கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரரான செந்தில்நாதன் 2013-ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.

கட்டை ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 14 கொலை வழக்குகளிலும், 3 கொலை முயற்சி வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...