No menu items!

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி – பூஜா ஹெக்டே

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி – பூஜா ஹெக்டே

Vijay66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ. தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டமான, பவர்ஃபுல்லான தயாரிப்பாளர்.

Vijay66 படத்திற்கு பூஜா ஹெக்டேவைதான் முதலில் நினைத்திருந்தோம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பூஜா ஹெக்டேவுக்குப் பதிலாக ராஷ்மிகா மந்தானா ஹீரோயினாக நடிக்கிறார் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் தயாரித்து கொண்டிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தில் பூஜா ஹெக்டேவை ஒரு ஆட வைத்திருக்கிறார்கள். இந்த ஒரு பாடலுக்கும் மட்டும் ஆட, ஒரு கோடி வேண்டுமென பூஜா ஹெக்டே கேட்க, புன்னகைத்தப்படியே ஒரு கோடி ரூபாயைக் கொடுத்து கமிட் செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே பூஜா ஹெக்டே பக்கம் தென்றல் அடிக்கிறது.

கேஜிஎஃப்2 படத்தின் எடிட்டருக்கு வயது 19.

கேஜிஎஃப்2 படம் பற்றிய எதிர்பார்பு எக்கச்சக்கமாக இருக்க, அதற்கேற்ற வகையில் படத்தின் காட்சிகளும், எடிட்டிங் ஸ்டைலும்  சூட்டைக் கிளப்பி கொண்டிருக்கின்றன.

கேஜிஎஃப்2 படத்தின் ட்ரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்களது பாராட்டுகளை இந்த 19 வயது டீன் ஏஜ் பையனுக்குதான் சொல்லவேண்டும். அந்த கில்லாடியின் பெயர் உஜ்வல் குல்கர்னி. கேஜிஎஃப்2  படத்தின் எடிட்டராக அறிமுகமாகி இருக்கிறார்

குறும்படங்களுக்கும், ரசிகர்கள் உருவாக்கும் வீடியோக்களுக்கும் எடிட் செய்து வந்த இந்த டீன் ஏஜ் உஜ்வல், கேஜிஎஃப் படத்தின் முதல்பாகத்தை ரீஎடிட் செய்திருக்கிறார். இதைப் பார்த்து அசந்து போன படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல்  வாடா என் செல்லக்குட்டி என்று கேஜிஎஃப்2 படத்தின் எடிட்டிங் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

கேஜிஎஃப்2 எடிட்டிங்கை பார்த்து இந்த 19 வயது டீன் ஏஜ் பையனுக்கு விருதுகள் நிச்சயம் என்று ஆளாளுக்கு குறி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்

தொங்கியது அஜித்61

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. இரண்டு பாடல்களுக்கான கம்போசிங் ஏற்கனவே முடிந்து விட்டது.

இந்தப் படத்தில் அஜித் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார். மாணவர்களின் இன்றைய பிரச்சினைகள் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரிடமிருந்து தகவல் வருகிறது.

நாயகி யார் என்பதுதான் சஸ்பென்சாக இருக்கிறது. பூஜா ஹெக்டேதான் ஜோடி என்று கூறப்பட்டது. ஆனால் அவர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருப்பதால் இப்போது வேண்டாம் என்று படக் குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். ராஷ்மிகா மந்தானாவும் அடுத்த விஜய் படத்தில் நடிப்பதால் அவருக்கும் வாய்ப்பில்லை. புதிதாக இந்திப் பட கதாநாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். தற்போதைய பாலிவுட் கனவுக் கன்னியான ஆலியா பட்டின் சம்பளமும் அதிகம் திருமணமும் நடக்க இருப்பதால் ஆலியா பட் இல்லை. சஸ்பென்ஸ் தொடருகிறது.

நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள இப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் முக்கிய கதாபாத்திரத்தில் தேர்வாகி நடிக்கவுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய பிறகும் கதாநாயகி யார் என்பதை முடிவு செய்யாமலிருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.  

வினோத் அவர்களே சீக்கிரம் சஸ்பென்சை உடையுங்கள்.

பஹத் பாசிலும் கவுதம் மேனனும் இணையும் ‘நிலை மறந்தவன்’

மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஃபகத் ஃபாசில் நடித்த அந்தப் படம் இப்போது தமிழுக்கு ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் வெளியாகிறது.

மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களைப் பற்றிய கதை. அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல். படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமல் இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதுதான் திரைக்கதை.

ஹீரோவாக ஃபகத் ஃபாசில். கதாநாயகியாக அவரது மனைவி நஸ்ரியா. வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்கிறார்கள்.

பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் படத்தை இயக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...