No menu items!

குக்கரில் வெந்த காதலி – மும்பை பயங்கரம்

குக்கரில் வெந்த காதலி – மும்பை பயங்கரம்

தவறான உறவுகள் வாழ்க்கையில் தவறான முடிவுகளைத்தான் தரும் என்பது நீதி. இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக மும்பையில் திகிலூட்டும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. சொந்தமாக குடும்பம் இருந்தும், ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நபர், அந்தப் பெண்ணை கொன்று உடல் பாகங்களை குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். அத்துடன் நிற்காமல் குக்கரில் வெந்த பாகங்களை நாய்களுக்கு உணவாகப் போட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த மனோஜ் சானே என்ற 56 வயது நபர்தான் இந்த கொடூர செயலைச் செய்தவர். போரிவிலி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திவரும் அவருக்கு, ஏற்கெனவே திருமணமாகி குடும்பம் இருக்கிறது. ஆனால் ‘முதல் மரியாதை’ பட ஸ்டைலில் நடுத்தர வயதைத் தாண்டியதும் சரஸ்வதி வைத்யா (வயது 36) என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கிறார்.

சரஸ்வதி ஆதரவற்ற பெண். அவருக்கும் தோள் சாய ஒரு தோழன் தேவைப்பட்டிருக்கிறான். அந்த தோழன் தான் 56 வயது மனோஜ். இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் இருந்தபோதிலும் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். 3 ஆண்டுகளுக்கு முன் மும்பையின் மீரா ரோடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து அதில் திருமணமில்லாமால் இணைந்து வாழ்தல் என்ற முறையில் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இனித்த காதல், பிறகு கசக்கத் தொடங்கியிருக்கிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்களும், இதனால் சண்டையும் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த மனோஜுக்கு, அதன்பிறகு சரஸ்வதி மீது அடக்க முடியாத கோபம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் ஒரு நாள் சண்டை அதிகமாக ஆவேசமடைந்த மனோஜ், சரஸ்வதியை கடுமையாக தாக்கியிருக்கிறார். அத்துடன் நிற்காமல் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். ஆனால் கொலை செய்த பிறகு தான் போலீசில் சிக்கிவிடுவோமோ என்று பயந்திருக்கிறார். உடலை என்ன செய்வது என்று யோசித்திருக்கிறார்.

அப்போது அவருக்கு டெல்லியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த ஒரு பெண்ணின் கொலை நினைவுக்கு வந்திருக்கிறது. அந்தக் கொலையில் காதலியின் உடலை வெட்டி துண்டு துண்டாக்கி வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜில் வைப்பான். பிறகு அந்தத் துண்டுகளை ஒவ்வொன்றாக ஊருக்கு வெளியே கொண்டு போய் வீசுவான்.

அந்த சம்பவம் நினைவுக்கு வந்ததும் மரம் அறுக்கும் எலக்ட்ரிக் ரம்பத்தை வாங்கியிருக்கிறார் மனோஜ். அதைக் கொண்டு சரஸ்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். கைகள், கால்கள், தலை என்று உடலை துண்டு துண்டாக வெட்டி அடையாளம் தெரியாமல் இருக்க, அவற்றை குக்கரில் போட்டு வேகவைத்திருக்கிறார். தடயங்களை அழிக்க வீட்டை சுத்தமாக கழுவியுள்ளார். வேக வைத்த சில உடல் பாகங்களை நாய்களுக்கும் போட்டிருக்கிறார்.

மனோஜின் நடவடிக்கைகளில் சில நாட்களாக மாற்றத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் மீது சந்தேகப்பட்டுள்ளனர். அத்துடன் சரஸ்வதியையும் பல நாட்களாக வெளியில் பார்க்க முடியாதது அவர்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிரது. இதுபற்றி அவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரஸ்வதியின் பாதி உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு பாதியாக இருந்தன. சமையல் அறையில் இருந்த குக்கரில் வேக வைத்த நிலையில் இருந்த உடல் உறுப்புகளை போலீஸார் மீட்டனர். மூன்று பக்கெட்டுகளில் உடல் உறுப்புகள் இருந்திருக்கிறது. மனோஜ் சானேவையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மானோஜ் சானே மீது இப்படி பயங்கரமான குற்றச்சாட்டுக்களை காவல்துறையின் வைத்திருக்கும்போது அவர் வேறு கோணத்தில் இந்தக் கொலையைச் சொல்லுகிறார்.

“ஜூன் 3-ம் தேதி நான் வீட்டுக்கு சென்றபோது அங்கு சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்திருந்தார். அவரது வாயில் இருந்து நுரை வந்துகொண்டு இருந்தது. சரஸ்வதி தற்கொலை செய்து இறந்ததை அறிந்ததும் பதறிப் போனேன். நான் அவரை கொன்றதாக போலீஸார் என்னை கைது செய்வார்களோ என்று பயந்தேன். அதனால் அவரது உடலை துண்டுகளாக்கி குக்கரில் வேகவைத்து அழிக்க நினைத்தேன். சரஸ்வதியின் உடலை முழுமையாக அகற்றிய பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் போலீஸார் என்னை கைது செய்துவிட்டார்கள்” என்று வாக்குமூலம் தந்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. வழக்கு விசாரணையின் போது முழு விவரங்கள் வெளிவரும்.

ஆங்கிலத்தில் Copy Cat கொலைகள், தற்கொலைகள் என்று சொல்லுவார்கள். அதாவது ஒரு சம்பவத்தைப் பார்த்து மற்றொன்றை செய்வது. கடந்த வருட நவம்பரில் டெல்லியில் துண்டு துண்டாக அறுத்து ஃப்ரிட்ஜில் வைத்த செய்திக்குப் பிறகு மற்றொரு கொலைக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் தாயும் மகனும் சேர்ந்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவனை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் வெளியில் வந்தது. இப்போது இந்த சம்பவம்.

ஃப்ரிட்ஜில் குக்கரில் உணவு இருக்கும் என்ற நிலை மாறி உடல் இருக்கும் என்ற அச்சம் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...