No menu items!

சசிகலா கையில் கட்டு! – மிஸ் ரகசியா

சசிகலா கையில் கட்டு! – மிஸ் ரகசியா

“ரஜினி வீட்டுக்கு போனவங்க எல்லாரும் இப்ப விஜய் வீட்டுக்கு வழி கேட்டுட்டு இருக்காங்களாம்” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“யாரைச் சொல்ற?”

“யார் யாரெல்லாம் ரஜினிக்கு வழிகாட்டினாங்களோ அவங்களைதான். அவங்களாம் விஜய் பிஏ நம்பர் கேட்டுக்கிட்டு இருக்கிறதா சினிமா வட்டாரத் தகவல்” என்று சொல்லி சிரித்தாள் ரகசியா.

“யாரு தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன், அர்ஜூன மூர்த்தி இவங்களையெல்லாம் சொல்றியா?”

“முக்கியமான ஒரு மூர்த்தியை விட்டுட்டிங்களே?”

“ஆமா. அவர் ஜோசப் விஜய்க்கு வழிகாட்ட மாட்டார்னு தெரியும்..விஜய் அரசியலுக்கு வர்றது உண்மைதானா..டைம்ஸ் ஆஃப் இந்தியாவுல பெரிய ஆர்டிகள் எழுதியிருக்காங்களே?”

“ஆமாம். உறுதி ஆயிடுச்சுன்னுதான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சொல்றாங்க. வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல 5 தொகுதியில விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும்ங்கிறது அவங்க நம்பிக்கை. அதோட இனி விஜய்யை நிறைய நிகழ்ச்சிகள்ல பார்க்கலாம்னும் சொல்றாங்க. முதல் கட்டமா விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 17-ம் தேதி தமிழ்நாட்ல பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள்ல முதலிடம் பிடிச்ச மாணவர்களையும் அவங்க பெற்றோரையும் கூப்பிட்டு உதவித் தொகை வழங்க விஜய் திட்டமிட்டிருக்கார். இதுக்காக எந்த செலவும் இல்லாம அவங்களை கூப்பிட்டு வரணும்னு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்கிட்ட விஜய் சொல்லி இருக்காராம். இந்த நிகழ்ச்சிக்காக 1,404 மாணவர்கள் 2,008 பெற்றோர்களோட லிஸ்ட் தயாராகி இருக்கு. ஒவ்வொரு மாணவருக்கும் 10 ஆயிரம் ரூபா கொடுக்க விஜய் திட்டமிட்டு இருக்காராம்.”

”இதுக்கெல்லாம் விஜய்க்கு ஆலோசனை சொல்றது யாரு?”

“நிச்சயம் ரஜினிக்கு சொன்னவங்க இல்லை. அவங்களையெல்லாம் பக்கத்துலயே சேர்த்துக்க வேணாம்னு சொல்லியிருக்கிறாராம். இப்போதைக்கு அவரே முடிவு எடுக்கிறார். அப்பாவைக் கூட கேக்குறதில்லை. சில ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் அவரது நட்பு வட்டாரத்துல இருக்காங்கனு சொல்றாங்க”

”விஜயகாந்த், ரஜினிகாந்தையெல்லாம் பாத்தப் பிறகும் விஜய் அரசியல் ஆசை இருக்குன்றது ஆச்சர்யம்தான். சரி, அமைச்சரவை மாற்றம் இல்லைனு முதல்வர் தஞ்சாவூர்ல சொல்லிட்டாரே? செந்தில் பாலாஜியை மாத்தப் போறாங்கனு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே?”

“நான் தான் சொன்னேன்ல நாடாளுமன்றத் தேர்தல் முடியற வரைக்கும் எந்த மாற்றமும் இருக்காதுனு. செந்தில் பாலாஜியை மாத்தலைனாலும் அவருக்கு முன்ன இருந்த பவர் இல்லன்றதுதான் உண்மை.”

“ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிற விஷயம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கே?”

“இந்த விஷயத்துல முதல்வர் ரொம்பவே அப்செட். அமைச்சர் மனோ தங்கராஜோட செயல்பாட்டுல முதல்வருக்கு திருப்தி இல்லை. ஆவினில் குழந்தை தொழிலாளர் வேலை பார்த்த விவகாரம் பற்றி ஒரு நிருபரிடம் அமைச்சர் விவாதித்த விதம் முதல்வருக்கு பிடிக்கலை. செய்தியாளர்களிடம் பேசும்போது கவனமா எல்லா குறிப்புகளையும் வச்சுக்கிட்டு பேசணும். அந்த விஷயத்தை நீட்டிக்க விட்டிருக்கக் கூடாது, விஷயத்தை சட்டுனு முடிச்சிருக்கணும்னு சொல்லியிருக்கிறார்”

“ஆக, முதலமைச்சரோட அதிருப்தி லிஸ்ட்ல மனோ தங்கராஜூம் சேர்ந்துட்டார். அப்படிதானே?”

“ஆமாம், அந்த லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது. அதான் திமுகவுல பேச்சு”

”மாவட்ட செயலாளர்கள் மேல முதல்வருக்கு இருந்த கோபம் குறைஞ்சிடுச்சா?

“உறுப்பினர்கள் சேர்க்கை விவகாரத்துல அவங்க சரியா செயல்படலைங்கிற கோபம் முதல்வருக்கு இன்னும் இருக்கு. போன வாரம் கலைஞர் நூற்றாண்டு விழாவை எப்படி சிறப்பா நடத்தறதுங்கிறதைப் பத்தின ஆலோசனை கூட்டம் நடந்திருக்கு. ஆலோசனைக் கூட்டம் முடிஞ்ச பிறகு இதைப்பத்தி முக்கிய நிர்வாகிகள்கிட்ட முதல்வர் ஆலோசனை நடத்தி இருக்கார். அப்ப, ‘உறுப்பினர் சேர்க்கைக்கு மாவட்ட செயலாளர்கள் ரொம்பவும் சிரமப்படுறதா சொல்றீங்க. அப்படின்னா நாம ஏன் கட்சி அளவுல மாவட்டங்களை அதிகரிக்க கூடாது? பேசாம ஒவ்வொரு மாவட்டத்தையும் 3,4-ன்னு பிரிக்கலாம்’னு சொல்லி இருக்காரு. அதனால திமுகல நிறைய பேருக்கு மாவட்ட செயலாளர் ஆகுற யோகம் இருக்கு.”

”பரவாயில்லையே அப்ப நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்”

“ஆமா ஆனா கூடவே உட்கட்சி மோதலும் அதிகமாகும்”

“மலர்விழி ஐஏஎஸ் வீட்ல சோதனைகள் நடந்திருக்கே?”

“இது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விரிச்ச வலைன்னு சொல்றாங்க. இவர் டைரக்ட் ஐஏஎஸ் இல்லை. அதிமுக ஆட்சில ஐஏஎஸ்ஸாக பதவி உயர்வு பெற்றவர். தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரா இருந்தப்ப முறைகேடுகளில் ஈடுபட்டார்னு மலர்விழி சம்பந்தப்பட்ட இடங்கள்ல சோதனை நடந்திருக்கு. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட அதிகாரியாக இருந்தார் மலர்விழி. இப்ப சோதனையில அவர் தொடர்பான சில ஆவணங்களை எடுத்திருக்கறதா சொல்றாங்க. விசாரணையிலயும் அவரைப் பத்தி சில தகவல்கள் கிடைச்சிருக்காம்.”

“அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் அதிகமாயிருச்சு போல. பல்கலைக்கழகங்கள்ல பட்டமளிப்பு விழா நடக்காததுக்கு கவர்னர்தான் காரணம்னு அமைச்சர் பொன்முடி சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். உடனே கவர்னர் பதறிப் போய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 7 பல்கலைக்கழங்களுக்கு மட்டும்தான் கேட்டாங்கனு சொல்லி இப்ப 4 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கொடுத்திருக்கிறார். மத்த யுனிவர்சிட்டிக்கெல்லாம் ஆகஸ்ட்டுக்கு அப்புறம் நடத்திக்கலாம்னு ராஜ்பவன் நியூஸ் சொல்லியிருக்கு”

“அதிமுகவின் செல்லூர் ராஜூவும் கவர்னரை எதிர்த்து பேசியிருக்கிறாரே?”

“அவர் மட்டுமில்ல. பாஜகவுல சிலருக்குமே கவர்னர் பண்றது பிடிக்கல. முக்கியமா தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கவர்னர் சர்ச்சைல மாட்டுறது பிடிக்கலயாம். கவர்னர் பத்தி பாஜகவும் அமித்ஷாவுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்களாம். கவர்னர் இப்படியிருந்தா அது பாஜகவுக்குதான் பாதிப்புனு சொல்லியிருக்காங்களாம் அந்த ரிப்போர்ட்ல”

”வைத்தியலிங்கம் வீட்டு கல்யாணத்துக்கு போனியா? சசிகலா வரலையாமே?”

“ஆமாம். சசிகலா வீட்டுல விழுந்து கையில அடிப்பட்டிருக்காம். கட்டுப் போட்டிருக்காங்களாம். வெளிலலாம் போக வேண்டாம்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்களாம்”

“உண்மையாவா?”

“நான் வீட்டுக்குள்ள போய் பார்க்கல, ஆனா வீட்டுக்குள்ளருந்து வர செய்தியைதான் சொல்றேன்”

“சரி, சரி கோவிச்சுக்காதே..அப்புறம்?”

“திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு வைத்தியலிங்கத்தை தொடர்பு கொண்ட சசிகலா, ‘நான் கல்யாணத்துக்கு வரலை. அடுத்த வாரம் ஒரு நாள் தனியா வீட்டுக்கு வந்து மணமக்களை ஆசிர்வதிக்கறேன்’னு சொல்லியிருக்காங்க. கல்யாணம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் தன்னோட படத்தை வைக்கக் கூடாதுன்னும் திட்டவட்டமா சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை வைத்திலிங்கம் டிடிவிதினகரன்கிட்ட சொல்ல, ‘நான் ஒரு விஷயம் சொல்றேன்… தப்பா எடுத்துக்க வேண்டாம். சின்னம்மா ஓபிஎஸ்சை ஏத்துக்க மாட்டாங்கனு எனக்கு ஏற்கெனவே தெரியும். நீங்களா இதைப் புரிஞ்சுக்கணும்னுதான் நான் எதையும் சொல்லாம இருந்தேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இப்ப ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி. அதனால் நீங்க இங்க வந்துடுங்க. நீங்க சொன்னபடி நான் கட்சியை நடத்தறேன்’ன்னு சொல்லியிருக்கிறார்”

“இது புது கதையால இருக்கு. சசிகலாவுக்கு ஓபிஎஸ்ஸை பிடிக்கல ஆனா தினகரனுக்கு ஓபிஎஸ்ஸை பிடிக்குது…

இது என்ன கணக்கு?”

“அந்தக் கணக்கை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு வர்ற சசிகலாவிடன் கேட்டுச் சொல்றேன்”

“பாம்பன் சுவாமிகள் கோயிலா? சசிகலாவா? என்ன விஷயம்”

“கொஞ்சம் பொறுமையா இருங்க..விசாரிச்சுட்டு ஃபுல்லா சொல்றேன்” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...